Tamilnadu

செந்தில் பாலாஜியா கொக்கா நேரடியாக செல்லாமல் சாதித்தார் பார்த்தீங்களா?

Jothimani
Jothimani

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்திய ஜோதிமணி தனது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளார், அத்துடன் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சமூகநலத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மாற்று திறனாளிகளுக்கு கொடுக்கப்பட இருக்கின்ற முகாம் நடத்த தனக்கு அனுமதி கொடுக்கவில்லை என தர்ணாவில் ஈடுபட்டார் ஜோதிமணி, பல்வேறு குற்றசாட்டுகளை கரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஜோதிமணி சுமத்தினார்.

செந்தில்பாலாஜி பெயரை குறிப்பிட முடியாமல் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் என்ற குற்றசாட்டு அதிகரித்த நிலையிலும் விடாமல் இரவு பகலும் பாய்விரித்து ஆட்சியர் அலுவலகத்திலேயே படுத்துவிட்டார் ஜோதிமணி இந்த சூழலில் தற்போது தனது போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார் ஜோதிமணி.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது - கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு அவர்களுக்கும் ,சட்டமன்ற காங் கட்சி தலைவர் ,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் எனவும்

நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எமது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சகோதர,சகோதரிகள்,ஊடக நண்பர்கள்,காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்  ஜோதிமணி.

இப்படி வெளிமாவட்ட அமைச்சர் நேரு பெயரை கூட குறிப்பிட்ட ஜோதிமணி சொந்த மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரை ஒப்புக்கு கூட சொல்லாதது இது வரை இருவருக்கும் மோதல் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கலெக்டர் அனுமதி கொடுக்காமல் வெளியேறமாட்டேன் என பிடிவாதம் பிடித்த ஜோதிமணியை எப்படி உத்தரவாதம் என்ற வார்த்தையை வைத்தே போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார் அமைச்சர் பார்த்தீங்களா கரூரில் செந்திபாலாஜியை மிஞ்ச முடியாது செந்தில் பாலாஜியா கொக்கா என அவரது ஆதரவாளர்கள் முனு முனுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.