பரத நாட்டியக் கலைஞன் ஜாகீர் உசேன், தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார் . இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்ற ஜாகீர் உசேனை, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் தடுத்து நிறுத்தியதாக ஜாஹிர் உசேன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் நிர்வாகம் யாரையும் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று மறுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனை தடுத்து நிறுத்திய ரங்கராஜன் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே ஸ்ரீரங்கம் கோயிலில் ஜாகிர் உசேன் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்.. அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து பல்வேறு சட்டங்களை சுட்டிக்காட்டிய ரங்கராஜ நரசிம்மன் இந்து அல்லாதோர் கோவிலுக்குள் செல்ல கூடாது என்பது விதி மேலும் ரங்கராஜ நரசிம்மன் ஜாஹிர் உசேன் பொய் சொல்வதாகவும் பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டினார்.
இந்த சூழலில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் சார்ந்த இஸ்லாம் மதத்தில் இருந்து இதுவரை நான் கோவிலுக்கு செல்வதற்கு எந்த எதிர்ப்பும் வந்தது இல்லை எனவும் குறிப்பிட்டு பேட்டி அளித்தார், இந்த சூழலில் ரங்கராஜ நரசிம்மன் தற்போது இஸ்லாம் மதத்தை சேர்ந்த பிகே ஜாஹிர் உசேன் இஸ்லாம் மதத்தில் இருந்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தான் சார்ந்த மதத்தில் தனக்கு எதிர்ப்பு இல்லை என சொன்ன ஜாகிர் உசேன் குற்றசாட்டு இதன் மூலம் பொய் என நிரூபணம் ஆகியுள்ளது, மேலும் இனி தொடர்ச்சியாக ஜாஹிர் உசேனை அம்பலப்படுத்த இருப்பதாகவும் ரங்கராஜ நரசிம்மன் தெரிவித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.