தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, பள்ளி மாணவிகள் பலர் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்க பட்டு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன இந்த சூழலில் மத்திய மாநில அரசுகள் இது போன்ற தற்கொலை நடைபெறாத வண்ணமும் குழந்தைகள் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கானா பாடல் என்ற பெயரில் ஒருவன் பெண்கள் காதல் குறித்தும் உறவு முறை குறித்தும் காதலிக்கும் போதே உடலுறவு கொள்வோம் எனவும் அதிலும் 8ம் வகுப்பு படிக்கும் போதே என பாடும் பாடல் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, இந்த சூழலில் பாடல் பாடிய நபரை கைது செய்யவேண்டும் என கண்டன குரல்கள் வலுக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தற்போது ஊடகவியலாளர் குணசேகரன் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் அதில்., விவாத நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் பிரபாகரன் திருமாவளவன் ஒரு சமுதாயத்தை தவறான வழியில் கொண்டு செல்ல முயன்று வருகிறார் என கூறினார் அவ்வளவுதான் பாக்கி குணசேகரன் குதி குதி என குதித்துவிட்டார்.
திருமாவளவன் எழுதிய புத்தகத்தை படித்து இருக்கிறீர்களா? அவர் தற்போது மக்களவை எம்பி தெரியுமா? அவர் ஸ்காலர் தெரியுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி காரரை போன்று கொந்தளித்து இருந்தார்.இந்த சூழலில் சர்ச்சையாக கானா பாடல் பாடியவன் திருமாவளவன் உடன் இருந்து திருமாவளவனை புகழ்ந்து பாடல் பாடுவதும் போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது. இது அத்தனையும் கோர்த்து பெர்வித் இந்தியன் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வைரலாகும் வீடியோவை பார்த்து பிரபாகரன் தரப்பு இப்போது குணசேகரன் என்ன சொல்ல போகிறார்? பதில் கூறுங்கள்.! இது போன்ற நபர்கள் பாடும் பாடல்கள் பள்ளி மாணவர்கள் மனதில் பதிந்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட மாட்டார்களா என்ற கேள்வியை குணசேகரனை நோக்கி எழுப்பி வருகின்றனர். இப்போது குணசேகரன் என்ன சொல்ல போகிறார்? கானா பாடல் என்ற பெயரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை ஊக்குவிக்கும் பாடல் பாடியவனை தமிழக காவல்துறை கைது செய்யுமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.