24 special

“நாட்டு நாட்டு” பாடல் குறித்து சர்ச்சை பதிவு... திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு..

Rajiv gandhi dmk
Rajiv gandhi dmk

ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராஜிவ் காந்திக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜிவ் காந்தி அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் கடந்த செப்டம்பர் மாதம் இணைந்தார். தற்பொது திமுக மாணவர் அணி தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர், 2023 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை ‘ஆர்ஆர்ஆர்’படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றது. 

95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த அசல் பாடலுக்கான விருதை வாங்கிய  “நாட்டு நாட்டு” பாடல் குறித்து ராஜிவ் காந்தி அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டு...நாட்டு... பாட்டின் நடனம், படத்தில் வரும் ஆங்கிலேயரின் எதிர்பை தாண்டி உலகில் உள்ள அனைவரையும் ஆட வைத்துள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வரும் இந்துத்துவ கருத்துகளை பகிர்ந்து பாஜக சங்கிகள் போலி தேசபக்தி பெருமை கொண்டனர் என்று குற்றம் சாட்டினார். 

மேலும் ஆங்கிலேயரையே எதிர்த்து படம் எடுத்தாலும் ஆஸ்கர் விருது கொடுத்து கலைக்கு அரசியல் இல்லை என நிரூபித்து விட்டது “ஆஸ்கர் விருது குழு”. இப்போதாவது சங்கிஸ் கொஞ்சம் திருந்துங்கள் கலைக்கு மதச்சாயம் பூசாதீர்கள்! என்று சர்ச்சையாக பதிவிட்டிருந்தார். 

இந்த டிவிட்டர் பதிவுக்கு, டிவிட்டரிலேயே பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், “ஆஸ்கர் விருது பிரிட்டிஷ் காரன் கொடுக்கல.., கழக தலைவனுக்கு ஒரு ஆஸ்கார் விருது வேணும்ன்னு கேளு.. அதான் உன் வேலை.. அமேரிக்காவுக்கும் பிரிட்டிஷ்க்கும் வித்தியாசம் தெரியாத ஆளா இருக்கிங்களே” எனவும்,  “ஆப்ரிக்காவில் சுதந்திர போராட்டத்தை பற்றி படம் எடுத்தாலும் அப்படி தான் எடுப்பாங்க., ஏன் அமெரிக்காகாரனே அப்படி தான் எடுப்பான்” எனவும், ஆங்கிலேயேர்கள் என்றால் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அதை தெரிந்து கொண்டு முதலில் பதிவு போடுங்கள் எனவும், பொதுமக்கள் அவருடை டிவிட்டர் பதிவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.