தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்ற வீடியோவை ஆளும் கட்சியை சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கிண்டல் செய்த நிலையில் அதை தமிழக ஊடகங்களும் செய்திகளில் முன்னிலை படுத்தினர், தமிழகத்தை சேர்ந்த தேசிய ஊடகங்களில் பணிபுரியும் சிலரும் இந்த விவகாரத்தை தேசிய ஊடகங்கள் வரை எடுத்த சென்றனர்.
இந்த சூழலில் அண்ணாமலை படகில் பயணம் செய்தது குற்றமா? ஒரு பிரபலத்தை வீடியோ எடுக்கவோ அல்லது நேர்காணல் செய்யவோ சென்றால் நிச்சயம் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோவில் ஒளிபரப்பவும் தேவையான நிகழ்வுகளை செய்வார்கள் அது அரசியலில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், நிலைமை இப்படி இருக்க ஏன் அண்ணாமலை படகில் சென்றதும் அது படம் பிடிக்கப்பட்டதும் ஊடகங்களால் பெரிதாக்கபட்டது என்ற கேள்வி எழுந்த சூழலில்.
பகிர் தகவலை பதிலடியாக கொடுக்கிறது பாஜக தரப்பு , அண்ணாமலை சமீபத்தில் கேட்கும் கேள்விகள் ஆளும் கட்சியை விழி பிதுங்க செய்துள்ளது குறிப்பாக அமைச்சர்கள் முதல்வர்கள் மீது நேரடியாக கேள்வி எழுப்புகிறார் அண்ணாமலை, இந்த கேள்விகள் பாமரனுக்கும் புரியும் படி உள்ளது.
சமீபத்தில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்ததை கொளத்தூர் தொகுதியில் பார்வையிட்டு நிவாரண பொருள்களை வழங்கினார் அப்போது பொது மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர், வருடம் வருடம் மழை காலங்களில் உணவு தருகிறார்களே தவிர, நிலையான நிவாரணம் தரவில்லை நாங்கள் சாப்பாடு வாங்கவா இப்படி நிக்கவேண்டும் என
ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் , இது இருக்கையில் நிவாரண பணிகளை பார்வையிட வந்த முதல்வருக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, குறிப்பாக முதல்வர் சாப்பாடு வழங்கி கொண்டு இருக்கையில் பெண் ஒருவர் எங்களுக்கு சாப்பிடு வேண்டாம் சார் வாழ வழி செய்யுங்கள் என சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.
அதன் பிறகு முதல்வர் வாகனத்தை மறைத்த ஊர் மக்கள் இதுதான் விடியலா என கேட்ட கேள்வியும் வைரலாகிறது, இதையடுத்து முதல்வருக்கு எதிர்ப்பு கிளம்புவதை அறிந்த காவல்துறை கயறு போட்டு பொது மக்களை வெளியில் வராமல் பாத்து கொண்டுள்ளது. இந்த வீடியோக்கள் ஊடகங்களில் விவாத பொருளாக மாறினால் வருகின்ற மாநகராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக நிச்சயம் தோல்வியை தழுவும்.
இதையடுத்துதான் ஊடகங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் நிலை வெளிவர கூடாது என்பதற்காக, அண்ணாமலை படகில் சென்றதை விவாத பொருளாக மாற்றுக்கிறார்கள், அண்ணாமலை சென்ற நேரத்தில் பொது மக்களும் அதே அளவு நீரில் மீட்புக்குழுவினாரால் பொதுமக்கள் படகில்தான் அழைத்து வந்தார்கள் அது எப்படி?
உண்மையில் ஊடகங்கள் மக்கள் குரலாக ஒலிக்காமல் உண்மையை மூடி மறைக்க வேலை செய்கின்றன என TNNEWS24 -டம் விளக்கமாக பதிவு செய்துள்ளார் கமலாலயத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி , மொத்தத்தில் முதல்வர் மீதான பொதுமக்கள் கேள்வியை திசை திருப்ப தமிழக ஊடகங்கள் அண்ணாமலை படகில் சென்ற விவகாரத்தை ஊதி பெரிதாக்கிய நிலையில் தற்போது அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது போன்று முக்கிய நிகழ்வுகள் அரசியல் தகவல்களை ஆழமாகவும் மாறுபட்ட கோணத்திலும் அறிந்துகொள்ள, மறக்காமல் உங்கள் TNNEWS24 DIGITAL YOUTUBE பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். உங்கள் ஒவ்வொரு ஆதரவும் இது போன்று பல நிகழ்வுகளின் பின்னணியை அறிய உதவும்.