Tamilnadu

அண்ணாமலை மீது விமர்சனம் வாங்கி கட்டிய ஜோதிமணி பழசை கிண்டி கிளறி பதிலடி !

Annamalai - Jothi mani
Annamalai - Jothi mani

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினார், அத்துடன் படகில் சென்று பார்வையிட்டார் இந்த சூழலில்  அண்ணாமலை நேரலையின் போது  புகைப்படம் எடுக்க போட்டோ கிராபர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த சூழலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அண்ணாமலை வீடியோவை  பகிர்ந்து : மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?! இது அரசியல் அவலத்தின் உச்சம்.  பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பாஜகவினர் கடுமையான பதிலடியை கொடுத்து வருகின்றனர், நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய முதல்வர், அமைச்சர்கள் சென்றபோது  சாமியான பந்தல் இருந்ததே அங்கு என்ன சுப நிகழ்ச்சி நடந்ததா அப்போது எங்கே போனீர்கள் என ஒருவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் சரியாக 8 மாதத்திற்கு முன்னர் காந்தி சிலை அகற்றப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டீர்கள் அப்போது மொத்த கூட்டமே 50 பேர்தான் இருந்தீர்கள் ஆனால் காவல்துறை வாகனத்தில் ஏற்றும் போது நீங்கள் மயக்கம் வந்தது போல் ஒரு ட்ராமா போட்டீர்களே அதை விடவா என மற்றொருவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். வருத்தமாக இருக்கிறது என பேசி இப்போது பதிலடியை வாங்கி வருகிறார் ஜோதிமணி.

இது ஒருபுறம் இருக்கிறது என்றால் தருமபுரி எம் பி செந்தில் ஆங்கில ஊடகம் ஒன்று அண்ணாமலை வீடியோ காட்சி செய்வது குறித்து வீடியோ தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டது அதனை முழுவதுமாக பார்க்காமல் ஷேர் செய்த செந்தில் பாஜகவை கிண்டல் செய்து இருந்தார் ஆனால் அதே வீடியோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பந்தல் போட்டு சேதார நிகழ்ச்சிகளை பார்வை இடுகிறார் எனவும் செய்தியில் குறிப்பிட்டுயிருக்கின்றனர்.

அவற்றை கூட முழுவதுமாக பார்க்காமல் பகிர்ந்து அவரும் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.  மொத்தத்தில் தமிழக அரசியல் தற்போது அண்ணாமலையை சுற்றியே வருகிறது நேற்றைய தினம் தேனியில் அண்ணாமலை கொடுத்த பேட்டி வைரலான நிலையில் தற்போது, இன்று அண்ணாமலையின் கொளத்தூர் விசிட் வைரலாகி வருகிறது.