அலும்னி அசோசியேசன் நிர்வாகியாக இருப்பவர் பாஃதர் சேவியர் அல்போன்ஸ்.இவர் தன் அலுவலகத்தில் வைத்தே மேரி ராஜசேகரன் என்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
அவரை தள்ளிவிட்டு ஓடி வந்த பெண்அலுவலக நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனை கண்டு கொள்ளாத லயோலா நிர்வாகம் அவரை காவல்துறையில் புகார் அளிக்க கூடாது என மிரட்டியுள்ளது.தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தார்.
"பாஃதர் சேவியர் அல்போன்ஸ் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.அலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசிவருகிறார். இது குறித்து லயோலா நிர்வாகத்திடம் தெரிவித்த போது அவர்கள் பாஃதர் சேவியர் அல்போன்ஸை இடமாற்றம் செய்கிறோம்.நீங்கள் புகார் எதுவும் கொடுக்க கூடாது என மிரட்டும் தொனியிலேயே பேசுகின்றனர்."என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுவரை லயோலா சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை..இதை ஒரு சாதாரண புகாராகவே காவல்துறையும் கடந்து செல்கிறது..மிஷனரிகளின் ஆக்டோபஸ் கைகளில் சிக்கி இருக்கிறது திமுக தலைமையிலான திமுக அரசு.
சேஷாத்திரி பள்ளி சம்பவத்திற்காக பொங்கும் பலரும் விரைந்து விளக்கம் கேட்கும் கல்வித்துறை அமைச்சரும், தயங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசும்,லயோலா கல்லூரி விவகாரத்தை ஏன் மூடி மறைக்கின்றனர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.... உங்கள் பீமா