Tamilnadu

அச்சச்சோ.. அடுத்த 2 நாட்களுக்கு செம்ம மழை! எங்கெல்லாம் கனமழை அலெர்ட் தெரியுமா?

rain
rain

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கன மழையில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. சென்னை மட்டுமல்லாமல், அதன் பிறகு தமிழகம் முழுவதுமே மிகுந்த மழை பெய்து ஆற்று நீர் பெருக்கெடுத்து உள்ளது.  


பல வீடுகள் வெள்ள நீரில் சேதமடைந்தும் வாகனங்கள் பழுதடைந்தும் உள்ளது.  ஒரு பக்கம் வெள்ளம் பாதித்த பகுதிகளின் சீரமைப்பு பணிகள் விரைந்து செய்யப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில்  மீண்டும் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும், நாளை முதல் லேசாக மழை பெய்ய தொடங்கி வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக 27 ஆம் தேதியன்று ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சை, காரைக்கால், மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

28 ஆம் தேதி பொறுத்தவரையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,மயிலாடுதுறை, காரைக்கால், புதுவை, திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, நாகை, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் மட்டும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

ஏற்கனவே பெய்த மழையால் பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கும் தருணத்தில், மீண்டும் மழை பெய்தால் எப்படி தாக்குபிடிப்பது என்ற கவலை இப்போதே மக்களிடையே ஏற்பட்டு இருக்கின்றது. பொதுவாகவே இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஏரிகள் நிரம்பி ஆற்று நீர் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த ஆற்றுநீரில் குறிப்பாக பாலாறு, கவுண்டன்ய நதி,பவானி, கொடிவேரி அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் நீர்வளம் பெருகினாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இப்படி ஒரு நிலையில் மிகுந்த மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஏரிகளும் அணைகளும் குளங்களும் நிரம்பி இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆண்டுகளில் வறட்சியும் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் தூர்வாரப்படாத ஏரிகள் குளங்கள் தமிழகத்தில் இருப்பதும், போதுமான அளவுக்கு தடுப்பணை  இல்லாமல் வீணாக ஆற்று நீர் கடலில் கலப்பது தான் இங்கு வேடிக்கையே. மழை வந்தால் குறை சொல்லி என்ன பயன்? மழை வருவது இயற்கை நமக்கு கொடுத்த வர பிரசாதம். மனிதர்களின் சுயநலத்திற்காக மேற்கொள்ளப்படும் முறைகேடுகளில், இன்று ஏதுமறியா மக்கள் பாதிப்படைய காரணமாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.