தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா வருகை கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள சூழலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது முதல் நட்டா பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு முக்கிய தகவலை பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் "ஸ்டான்லி ராஜன்" அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு :-
நேற்று தமிழகத்தில் மாபெரும் ஆச்சரியம் ஒன்றை செய்து காட்டியிருக்கின்றது பாஜக கட்சி, நிச்சயம் அவர்களுக்கு இது மிக உற்சாகமான ஒன்று, தமிழகத்துக்கு அதிசயமான ஒன்று., நேற்று கோவையில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா முன்னிலையில் இணைந்திருக்கின்றார்கள் பல பிரமுகர்கள், இவர்களில் அதிமுக முன்னாள் எம்.எ.ஏக்கள் முதல் அமமுகவினர் பாமகவினர் என பெரும் கூட்டம் ஓடி வந்து இணைந்திருக்கின்றது
மாற்றுகட்சியினர் ஒரு கட்சி தேடி வருகின்றார்கள் என்றால் அக்கட்சி வளர்கின்றது, அதற்கு மிகபெரிய எதிர்காலம் இருப்பதாக நம்பபடுகின்றது என்பதே அரசியல் அர்த்தம், இந்த விழாவில் நட்டா பேசியதுதான் ஹைலைட். பாஜக தலைவரான நட்டா திமுகவினை குறிவைத்து பேசினார், அதன் குடும்ப அரசியலையும் இன்னும் அதன் பலவீனங்களையும் பட்டியலிட்டு பேசினார், கட்சியின் அகில இந்திய தலைவர் தமிழகம் வந்து மாநிலத்தினை ஆளும் கட்சியினை தாக்கி பேசுவது சாதாரணம் அல்ல, பாஜக திமுகவினை மிக தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டது என்பதே அதன் அர்த்தம்.
இதனால் பாஜக செய்திருக்கும் காரியங்கள் இரண்டு, முதலாவது மிக வேகமாக வளர்கின்றோம் என தமிழகத்தில் தங்கள் வளர்ச்சியினை பதிவு செய்தது, இரண்டாவது ஸ்டாலினும் செந்தில் பாலாஜியும் கொங்கு மண்டலத்தில் செய்த அரசியல் காட்சிகளை அப்படியே கலைத்து போட்டது. கொங்கு மண்டலத்தில் ஸ்டாலின் கட்சி மேடையும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்த சில தினங்களிலே பாஜக திருப்பி அடித்து, அங்கேயே திமுகவினை பாஜக தலைவர் பொளந்து கட்டி அதற்கு சிறு எதிர்ப்பும் வராமல் காட்டியதில் திமுகவின் இமேஜ் சரிந்து கிடக்கின்றது
ஆனானபட்ட இந்திராகாந்தியினயே அடித்து, இன்னும் பல தேசிய தலைவர்களையெல்லாம் விரட்டி அடித்த திமுக இப்பொழுது வாய்திறக்க முடியாமல் நிற்கின்றது. முன்பு மோடி அரசியல் பேசாமல் நாட்டு நிகழ்வுக்கு வந்தபொழுது எதிர்கட்சியாக இருந்து கருப்பு கொடி கருப்பு பலூன் என அழிச்சாட்டியம் செய்த கட்சி இப்பொழுது கடிவாளமிட்ட குதிரையாக, அங்குசத்தால் முழங்காலில் நிறுத்தபட்ட யானையாக அடங்கி கிடக்கின்றது, ஆம், நட்டா பேசிய வார்த்தைகள் சாதாரணம் அல்ல, அதற்கு இந்த அளவு திமுக மவுனம் சாதிக்கின்றது என்றால் மத்திய அரசை அவர்கள் பகைத்து கொள்ள விரும்பவில்லை என்பது தெரிகின்றது.
மத்திய கட்சியின் தலைவர் வந்து திமுகவினை பொளந்துகட்டி மிதித்துவிட்டு சென்றபின்பும் திமுக அமைதியாக இருப்பது ஆச்சரியமில்லை அவர்கள் அப்படித்தான், ஆனால் அப்படி ஒரு கட்சி கூட்டம் நடந்ததாகவோ அதில் தமிழக மாற்று கட்சியினர் ஓடி வந்து சேர்ந்ததாகவோ ஒரு வார்த்தை கூட ஒரு கூடகத்திலும் வரவில்லை அதுதான் ஆச்சரியம். அந்த அளவு ஊடகமெல்லாம் திராவிட அடிமைகளாய் ஆகிவிட்டது சோகம், தமிழகத்தில் பாஜக வளர தொடங்கியிருப்பது தெரிகின்றது, மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது
நட்டா திமுகவினை ஊமை குத்தாக குத்தி பல்ஸ் பார்த்துவிட்டார், இனி ஆளாளுக்கு வந்து என்ன குத்தெல்லாம் குத்தபோகின்றார்களோ தெரியாது ஆனால் ஒவ்வொருவராக வந்து நிச்சயம் அடித்து கொண்டே இருப்பார்கள்.பொதுவாக எதிர்கட்சியாக இருக்கும் பொழுது சுயமரியாதையும், மானமும் திமுகவினருக்கு அதிகம், ஆனால் ஆளும்கட்சியாகிவிட்டால் அவர்களுக்கு "எதையும் தாங்கும் இதயம்" வந்துவிடும்
இப்பொழுது ஆளும்கட்சி என்பதால் வழக்கம் போல "இதையும் தாங்குவோம் எதையும் தாங்குவோம்" என புன்னகை பூக்க அமர்ந்திருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன். மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலை குறிவைத்து நேரடியாக களம் இறங்கி இருப்பதும் குறிப்பாக கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களை அது வலுப்படுத்தி வருவதும் நேற்றைய அக்கட்சியின் நிகழ்ச்சி மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.