பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் விநாயகர் ஜெயந்தி விழாவினை தமிழக காவல்துறை மூலம் திமுக அரசாங்கம் முடக்கி வருவதாகவும் இன்று விநாயகர் ஜெயந்திக்கு வேடிக்கை பார்த்தால் நாளை தீபாவளி பண்டிகையை இந்த அரசாங்கம் நடத்த விடாது எனவும் தமிழகம் முழுவதும் உள்ள ஆன்மீக பெரியவர்கள் இணைந்து எதிர்வினை ஆற்றவேண்டும் என கூறியுள்ளார்.இதுகுறித்து மாரிதாஸ் குறிப்பிட்ட செய்தி பின்வருமாறு :- தமிழகத்தின் பல இடங்களில் விநாயகர் சிலை விற்பனை செய்வதைத் தடை செய்வதும் , விற்பனை செய்யும் இடங்களில் காலி செய்வதும் , விநாயகர் சிலைகளைப் பறிமுதல் செய்வதும் , உடைத்தெறிவதுமாகச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
எல்லா பகுதியிலும் இருக்கும் இந்துக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பினை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இன்று விநாயகர் சதுர்த்தி நாளை திபாவளி?திமுக - திக - மதம் மாற்றும் கும்பல் இணைந்து நடத்தும் தாக்குதல் என்றே இதைக் கருத வேண்டும். இதற்குத் தக்க எதிர்வினையைத் தமிழகம் முழுவதும் உள்ள ஆன்மீக பெரியவர்கள் முன் வந்து காட்ட வேண்டும் என்பது என் கூடுதல் வேண்டுகோள்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் இந்துகளுக்கு வாழ்த்து தெரிவித்தது இல்லை என்ற நிலையில் இந்த அளவு அயோக்கிதனம் செய்ய தொடங்கி பின்பும் ஒரு இந்து திமுகவில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் எனவும் மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாரிதாஸ் குறிப்பிட்டது போல் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசாக திமுக அரசாங்கம் இருக்கவில்லை எனவும், இந்துக்கள் வாக்குகளை பெற வீதி வீதியாக பிரச்சாரம் செய்த ஸ்டாலின் தற்போது இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கள் கூறாமல் புறக்கணிப்பதும் விநாயகர் ஜெயந்தி ஊர்வலத்திற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதும் கடும் அதிர்வலைகளை மக்கள் மத்தியில் உண்டாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.