Tamilnadu

நாம ஏன் செய்தி சேனல் நடத்துறோம்.. அதை சொல்ல நீங்க யாரு ? முழுக்க முழுக்க வெளுத்து எடுத்த தமிழ்மணி , கார்த்திகேயன் டோட்டல் குளோஸ் !

TAMILMANI
TAMILMANI

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அமைத்தது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் 33 நாட்களில் ஆய்வை முடித்து கடந்த ஜூலை மாதத்தில் தங்களது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.


“அனைத்து அம்சங்களையும் அறிக்கையில் கொடுத்துள்ளோம். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதகங்களே அதிகம் எனப் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர்” என ஏ.கே.ராஜன் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில்  ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது ஆனால் இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாகும் இதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள் .

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ராஜன் குழுவின் பரிந்துரை குறித்து விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பிரபல வழக்கறிஞர் தமிழ்மணி நெறியாளர் கார்திகேயனையும் ,ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையும் வெளுத்து எடுத்துவிட்டார் .

மாணவர்கள் எழுதும் தேர்வில் ,இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு 5000 பேரிடமாவது இந்த குழு அறிக்கை கேட்டு இருக்கிறதா  இல்லை , சரி பொதுமக்களிடம் கருத்து கேட்பது  சரியாக இருக்குமா தேர்வை எழுதுகிற ,எழுதிய மாணவர்களிடம் கருத்து  கேட்டல் சரியாக இருக்குமா  யாரோ ஒருவரிடம் கருத்து கேட்டல் சரியாக இருக்குமா  என கேள்வி எழுப்பினார் ஏன் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கூடாதா என கேட்டார் நெறியாளர் , சொல்லலாம் இப்போ நாம விவாதம் நடத்துறோம் நீங்க செய்தி சேனல்  நடத்துறீங்க ஏன் நடத்துறீங்க உங்களுக்குத்தான் தெரியும் .

ஏன் குழுவின்  பரிந்துரையை ஏற்பதில் என்ன தவறு என நெறியாளர்  கேட்க கொந்தளித்துவிட்டார் தமிழ்மணி மாற்றுத்திறனாளி அது இது என பேசாதீர்கள் நொண்டி சாக்கு சொல்லாதீர்கள் கார்த்திகேயன் என்பதுடன் அடுத்து  அவர் கூறிய தகவலால் வாயடைத்து  போய்விட்டார் கார்த்திகேயன் , தமிழ்மணி கொடுத்த தகவல் மூலம்  முன்பு பத்திரிகையாளர் ஆழி  செந்தில்நாதன் கொடுத்த தகவலும் புஷ்வாணமானது அதிமுக ஆட்சியில் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்துவந்த நெறியாளர்கள் இப்போது பலத்த ஆடியை சந்தித்து வருகின்றனர் . வீடியோ கிழே  இணைக்கப்பட்டுள்ளது.