Tamilnadu

என்ன திருமுருகன் காந்தி நிலைமை இப்படி ஆகிப்போச்சு ! உள்ளே வைத்து வெளுக்காதது மட்டுமே மிச்சம்

Thirumurgan gandhi
Thirumurgan gandhi

ஒரு காலத்தில் தமிழகத்தில்   பிரபலமாக இருந்தவர் திருமுருகன் காந்தி , ஐ நா சபையிலே சென்று பேசக்கூடியவர் , மிகவும் நேர்த்தியான அறிவு திறமை கொண்டவர் என்றெல்லாம் திராவிட ஆதரவு ஊடகங்களும் ,இணையத்தளங்களும் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக விளம்பரங்கள் செய்து கொண்டு இருந்தன , இதன் எதிரொலியாக அரசியலின் ஆரம்ப கட்டத்தை அறிந்துகொள்ளாத இளைஞர்கள் திருமுருகன் காந்தி கூறியதை நம்பினர் .



ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை ,திருமுருகன் காந்தியை ஐ நா சபை அழைக்கவில்லை ,ஐநா சபை கட்டத்தில் உள்ள ஒரு அமைப்பு என்றும் ,அதில் விண்ணப்பித்து யார் வேண்டுமானாலும் உரையாற்றலாம் என்ற உண்மை வெளியானதும் பாதி  நபர்கள்  திருமுருகன் காந்தியை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்தனர் , இந்நிலையில் தான் மோடி அரசாங்கம் ரேஷன் கடைகளை மூட போகிறது ,எண்ணி இரண்டு வருடத்தில் ரேஷன் கடைகளை மூடி மக்களை ஏமாற்ற போகிறார்கள் என ஆருடம் கூறினார் திருமுருகன் காந்தி .

பாஜகவினர் இதை கடுமையாக மறுத்தனர் ,வேலை இல்லாத திருமுருகன் காந்தி இது போன்ற  பல பொய்களை சொல்ல கூடியவர் என்றும், உண்மை மக்களுக்கு தெரியவரும் என்றும் தெரிவித்தனர் , அதே போன்று திருமுருகன் காந்தி இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடை மூடப்பட்டுவிடும் என கூறி  இதோடு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது ,இது தவிர்த்து ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டதை  கொண்டு வந்து ஒழுங்குபடுத்தியுள்ளார் மோடி ,மேலும்  கொரோனா காலத்தில் அணைத்து மக்களுக்கும் இலவச உணவு தானியங்கள் வழங்கியுள்ளார் இதன் மூலம் திருமுருகன் காந்தி சொன்னது பொய் என உறுதியாகிவிட்டது .

இது ஒருபுறம் இருக்க கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவிற்கு ஆதரவான  நிலைப்பாடு எடுக்க  திருமுருகன் காந்தியிடம் பேசப்பட்டதாம் ,திருமுருகன் காந்தியும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தாயாரானாராம் ,ஆனால் திமுக பிரச்சாரம் வகுக்கும் குழுவோ நீங்கள் மேடை அமைத்து பேச தொடங்கினாலோ ,விவாதங்களில் பங்கேற்றாலோ அது பாஜக அதிமுகவிற்கு சாதகமாக  சென்றுவிடும் வீட்டிலேயே இருங்கள் தங்களுக்கு தேவையானதை செய்கிறோம் என கூறி திருமுருகன் காந்தியை அதிரவைத்துள்ளனர் .

இதனை சிறிது நாட்கள் முன்னர் தனியார் யூடுப் விவாதம் ஒன்றில் சூசகமாக சொல்லி  புலம்பினார் திருமுருகன் காந்தி , இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் மத்திய  அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையேற்று வழி நடத்தினார்,இதில் முன்னாள் எம் எல் எ தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார் .

ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததை பார்த்த திருமுருகன் காந்தி குழுவினர் நமக்கு பாதுகாப்பு அளிக்கத்தான் காவலர்கள் வந்து இருக்கிறார்கள் என நினைத்தனராம் ஆனால் இறுதியில் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் , அதுவும் தனியார் வாகனமோ அரசு பஸ்ஸோ இல்லாமல் கலவத்துறை வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர் , திருமுருகன் காந்தியை அதிர்ச்சியடைய செய்துள்ளது , சிறிது நாட்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் ஒன்றும்வித்தியாசம் இல்லை எனவும் எங்கள்  மீது புதிய வழக்கு வருகிறது பழைய வழக்குகள் வாபஸ் பெறவில்லை என திருமுருகன் காந்தி புலம்பியது குறிப்பிடத்தக்கது .

திருமுருகன் காந்திக்கு கருணை காட்டினால் வீணாக  மத்திய அரசை பகைத்து கொள்ள வேண்டின் இருக்கும் என்பதால்  தமிழக அரசு திருமுருகன் காந்தியை டீலில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது . இப்படி ஆகிருச்சே திருமுருகன் காந்தி நிலைமை என இன்னமுமாவரை நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு சிலர் வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறார்களாம் . கைது செய்துவிட்டார்கள் இனி கடந்த ஆட்சியை போல் தேச துரோக வழக்கில் உள்ளே தூக்கி வைத்து வெளுக்காதது மட்டுமே மிச்சம் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர் .