பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஒருமையில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் சிக்கி சிதைந்து வருகிறார் மாநில கைத்தறி அமைச்சர் காந்தி.இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை, 3,000 கோடியில் செய்வதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். மகளிர் குழுக்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட, 3,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, 2,700 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் முன்மாதிரியாக இதுவரை யாரும் செய்யாததை முதல்வர் செய்து வருகிறார். தொடர்ந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அரசு கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு,
அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுறியே நீ. அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அத பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தை பேசக்கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்ததைரியத்தில் பேசுறான். மத்தியில் அரசு இருக்குன்னு பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.தற்போது அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய அமைச்சரை நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர், இவர் அமைச்சர் காந்தியா இல்லை சாராயம் விற்கும் காந்தியா என பிரபாகரன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார், கைத்தறி அமைச்சர் என்று நினைத்தால் நாகரீகம் அறியாத கைத்தடி அமைச்சராக இருக்கிறாரே எனவும் கடுமையாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
ஏற்கனவே பல அமைச்சர்கள் அண்ணாமலையிடம் சிக்கிய நிலையில் தற்போது வாண்டடாக வந்து அமைச்சர் காந்தி தலையை கொடுப்பதாகவும், இதற்கு முறையான பதிலடி வரும் நாட்களில் தெரியும் எனவும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.. ஆமாம் அண்ணாமலையை போன்றே நிருபரையும் ஒருமையில் பேசிய அமைச்சரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்து அறிக்கை வெளியிடுமா?