நடிகர் சூர்யாவின் தந்தை சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அவர் பேசிய வார்த்தைகள் வைரலாகி வருகின்றன, ஜெய்பீம் படத்தின் கலை இயக்குனர் மற்றும் இயக்குனர் என இருவரும் எனது மகன்கள் தான், ஒரு படத்தை பார்த்துவிட்டு மாநில முதல்வர் சந்தோஷப்பட்டது எத்தனை பெரிய விஷயம்.,
படத்தின் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ஆட்சியர் ஆய்வு குறவர் இருளர் என ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் சந்தோசம் அடைந்தனர் பயன் அடைந்தனர் என பேசினார் சிவகுமார் இது தவிர்த்து, என்னுடைய காலத்தில் நான் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன் அதனால் காதல் செய்யவில்லை, இல்லை என்றால் சூர்யா போன்று காதல் திருமணம் செய்து இருப்பேன் என தெரிவித்தார் சிவகுமார்.
மேலும் பேசியவர் நான் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைய அப்போது 7500 ரூபாய் செலவானது இப்போது சூர்யா குடும்பம் ஒருவேளை உணவு வெளியில் சாப்பிட 15 ஆயிரம் ஆகிறது என குறிப்பிட்டு பேசினார், தலித் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் சிவகுமார், இந்த சூழலில் சிவகுமார் திடீர் என இப்படி பேச காரணம் என்ன என கேள்வி எழுந்தது.
சமீபத்தில் ஜான் பாண்டியன் சிவகுமார் ஒரு சாதி வெறியர் எனவும் ஜோதிகாவை சூர்யா காதல் திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார் எனவும் பேசினார், மேலும் ஜாதிய வன்மத்தால் விமான நிலையத்தில் தவறாக சிவகுமார் பேசியதாக குறிப்பிட்டார் ஜான் பாண்டியன், இந்த சூழலில் ஜான் பாண்டியன் தெரிவித்த கருத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தானும் பணம் இருந்தால் காதல் செய்து இருப்பேன் என சிவகுமார் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில் தன் மீது ஜான் பாண்டியன் சுமத்திய குற்ற சாட்டினை நீக்கும் விதமாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் சிவகுமார் பங்கேற்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிவகுமார் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :