24 special

அம்புட்டு போச்சே ஓரமாய் உட்கார்ந்த காங்கிரஸ்; மண்ணைக் கவ்விய ஆம் ஆத்மி!

Rahul gandhi,  modi,  arvind kejriwal
Rahul gandhi, modi, arvind kejriwal

குஜராத், இமாச்சலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி பாஜக வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மண்ணைக் கவ்வ வாய்ப்புள்ளதாகவும் வெளியாகியுள்ள கணிப்புகள் பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று NDTV இன் கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், ஆம் ஆத்மி கட்சி டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பாஜகவின் முதல் தோல்வியாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இம்முறை ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியதை அடுத்து தேர்தல் போர் தீவிரமடைந்தது. என்டிடிவியின் கருத்துக் கணிப்புகளின்படி, 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜக 132 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள  ஆம் ஆத்மி வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலிலும் வெற்றிக்கொடி கட்டும் பாஜக: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தில் 35 தொகுதிகளையும், காங்கிரஸ் 30 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பு இன்று தெரிவித்துள்ளது.  டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 155 வார்டுகளிலும், தற்போதைய பாஜக 84 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.