தர்மபுரி திமுக எம். பி செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு பாஜக பிரமுகர் கல்யாண் ராமன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதா சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து தவறான தகவலை அவன் என குறிப்பிட்டு ட்விட் செய்து இருந்தார் சின்னத்திரை துணை நடிகை ஷர்மிளா, அவருக்கு பதிலடி கொடுத்தார் கல்யாண் ராமான் இந்நிலையில் துணை நடிகையை தவறாக பேசிவிட்டார் என கல்யாண் ராமன் மீது புகார் கொடுத்துள்ளார் செந்தில் அதன் அடிப்படையில் கல்யாண் ராமனை கைது செய்துள்ளதாக கூறப்படும் நிலையில்.
பிரதமரை தவறாக பேசிய குற்றத்திற்கு காரணமான துணை நடிகை ஷர்மிளாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது மேலும் கல்யாணராமன் பேசியதை காட்டிலும் மிகவும் தரக்குறைவாக தவறான வார்த்தைகளை பேசியுள்ள சுந்தரவள்ளி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன இந்நிலையில் சுந்தரவள்ளியை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவற்றை போல விசிகவை சேர்ந்த வன்னியரசு நேரலை விவாதத்தில் பிரதமர் மோடி 2 ஆயிரம் இஸ்லாமியர்களை கொன்றார் என தவறான தகவலை கூறியதுடன் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டலும் விடுத்தார், கல்யாண் ராமனை கைது செய்த காவல்துறை ஏன் வன்னியரசுவை கைது செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக காவல்துறை முழுக்க முழுக்க ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது கூட்டணியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சூழல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தும் நிலைக்கு சென்று இருப்பது தமிழக காவல்துறை மீதான நம்பக தன்மையை கேள்வி எழுப்பும் நிலைக்கு மாறியிருக்கிறது.
A big thank you @DrSenthil_MDRD for putting this @##₹##₹ behind bars ....the scum deserves it 🙏🙏
— Dr Sharmila (@DrSharmila15) October 17, 2021
A warning to all desperadoes who don't have the guts to conduct a decent argument with women & land up abusing them...anyone who indulges in such behaviour will rot in jail 😡 https://t.co/ImyeeBUfxP