தமிழக ஊடகத்தின் தன்மையை செந்தில் கெடுத்துவிட்டார் என்பது எந்த அளவு உண்மை என்பது நேற்றைய தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் மூலம் உலகிற்கு தெரியவந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் சசிகலாவின் இன்றைய நகர்வு குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
இதில் மூத்த பத்திரிகையாளர் பிரியன், ஸ்ரீராம், தேனி கர்ணன், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர், இது விவாதம் என்ற நிலையில் மாறி அடிதடி கொலை வழக்கில் செல்லும் அளவிற்கு மிகவும் தரம் தாழ்ந்து சென்றது, பங்கேற்பளார் தேனி கர்ணன் கிருஷ்ணசாமி மீது கடுமையான விமர்சனத்தை வைக்க, பதிலுக்கு கிருஷ்ணசாமி காட்டான் என கூற அவ்வளவுதான் அரங்கமே அதிர்ந்தது.
போட மயிறு, வேலையா பாருடா நானா காட்டான் என தேனி கர்ணன் பேச விவாதத்தை பார்த்து கொண்டு இருந்த மக்கள் வெறுப்பில் முகம் சுளித்துவிட்டார்கள், இதில் பங்கேற்பாளர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் நிலைக்கு சென்ற பின்பு விவாதத்தை வேறு திசையில் நகர்த்தி இருக்கலாம் நெறியாளராக இருந்த செந்தில்.
அல்லது விவாதத்தை பாதியில் நிறுத்தி அதனை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லாமல் தடுத்து இருக்கலாம் இவை எதையுமே செய்யாமல் மீண்டும் மீண்டும் இருவரும் மோதிக்கொள்ளும் விதமாகவே கேள்விகளை வைத்தார் செந்தில், ஒருகட்டத்தில் பங்கேற்பாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை என்ற நிலையில் சென்றது.
இந்த வீடியோவை செந்தில் நினைத்து இருந்தால் வெளியில் வராமல் தடுத்து இருக்கலாம் ஆனால் அந்த வீடியோவை கட் செய்து வெளியிட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டு செய்ய முக்கிய காரணமாக அமைந்துவிட்டார் செந்தில். இந்நிலையில் ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைத்த செந்திலை சம்மந்தப்பட்ட நிர்வாகம் பணியில் இருந்து நீக்கவேண்டும் என்ற ஆதங்க குரல்களும் எழுந்து வருகின்றன.
பாரம்பரியமான செய்தி நிறுவனத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி TRP-காக இதுபோன்ற தவறான செயலை செய்யும் செந்திலை பணியில் வைத்து இருந்தால் முழுவதும் சேனல் மீதான மரியாதையை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .