
ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல உலகத்தை உலுக்கு இருக்கும் சம்பவமாக பகல்காம் தாக்குதல் நடந்து இருக்கிறது இந்துக்களை குறி வைத்து ஆண்களை மட்டும் சுட்டு கொன்று இருக்கின்றனர் ஒட்டு மொத்த உலகமே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகள் மட்டும் தற்போது வரை வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர்.
இந்த சூழலில் தான் நேற்றைய தினம் தப்பித்த பெண் ஒருவர் ANI நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில், “திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. மக்கள் அனைவரும் ‘ஓடுங்க, ஃபயரிங் நடக்குது’ என கூச்சலிட்டார்கள். நாங்களும் ஓடினோம். கூட்டத்திலிருந்து ஒருவர் தள்ள, கீழே விழுந்தோம். , நாங்கள் முன்னால் ஓடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் யாரும் யாரையும் பார்க்கவில்லை, உயிரைக் காக்கத்தான் நோக்கம்,” என அந்த பெண்மணி கூறுகிறார்.
அப்போது அந்த இடத்தில் 4,000 – 5,000 பேர் இருந்ததாகவும், பலர் சிறிய குழந்தைகளோடு வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.துப்பாக்கிச் சூடு நேரில் காணவில்லை எனினும், 20 அடி தூரத்தில் சத்தம் கேட்டதாக கூறிய அவர், “வாசல் வெறும் 4 அடி அகலம் தான். மக்கள் ஒருவரை ஒருவர் நசுக்கிக்கொண்டே ஓடினர். யாரும் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த நெருக்கடியான தருணத்தில், யாரும் யாரையும் தேடவே முடியவில்லை. என் கணவரும் மகனும் எனக்கு உதவினார்கள். என் பாதத்தில் காயம் ஏற்பட்டது,” என்று கூறினார்.
“நாங்கள் சுற்றுலா முடித்துவிட்டு வெளியே வருகிற நேரத்தில்தான் இந்த தாக்குதல் நடந்தது. இன்னும் இரண்டு நிமிடம் தாமதமாக இருந்திருந்தால், நாங்கள் இப்போது உயிரோடு இருக்க முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமான தருணம்,” என்று அவர்கள் பதற்றத்துடன் தெரிவித்தனர்.இதற்கு நிச்சயம் பதிலடி வேண்டும் இந்தியாவில் இந்துக்களாக பிறந்தது குற்றமா? இப்படி மதவெறி ஏன் என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.