
ஜம்மு காஷ்மீரில் அழாகான பகுதிகளில் ஒன்று பஹல்காம். இயற்கை அழகு மற்றும் அமைதிக்காக அந்த பகுதி அறியப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 21ம் தேதி அன்று பயங்கரவாதிகள் இந்த அமைதியை பறித்து, 26 பேரை கொன்று குவித்துள்ளனர் 'மினி சுவிஸ்ர்லாந்து' என அழைக்கப்படும் பேசாரன் புல்வெளியில் புல்வெளியில் புகுந்தனர். அங்கு பிக்னிக் வந்து பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.விராட் கோலி; தனது பதிவில் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைதியும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.கே.எல்.ராகுல்; காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே என்னுடைய எண்ணம் உள்ளது. அமைதி மற்றும் வலிமை பெற பிரார்த்திக்கிறேன்.சுப்மன் கில்;பஹல்காம் தாக்குதலை கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.அதேபோல, இந்திய சினிமா பிரபலங்களும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, அனுபம் கெர், கரீனா கபூர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, சஞ்சய் தத், ரவீனா டன்டன், நானி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழக நடிகர்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை ஜாதி, மொழி, இனவாதம் பேசி அதிக அறிவாளிகள் போல பொங்கி எழுந்து, கருத்துகளை கக்கியும், பாஜ, அதிமுக கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே விமர்சனங்களை செய்தும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறியும் சமூக வலைதளங்களை சூடுபிடிக்க வைத்த சினிமா நடிகர்கள், இரங்கல் கூட தெரிவிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், விஷால், கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள்.
பாஜவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு எதிராகவும் பேசிக்கொண்டு இருந்த இந்த நடிகர்களின் வாய் திமுக ஆட்சிக்கு வந்ததும் தானாகவே மூடிக்கொண்டது. இப்போது நடக்கும் எந்த பிரச்னையும் இவர்களை பாதிக்கவில்லை போலும். இந்த நடிகர்கள் தற்போது வாய் திறக்காமல் ‛கள்ள மவுனம் ' காப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் அரசின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் காரணமா என்றும் கேட்கின்றனர்.
அப்படி என்றால் இவர்கள் உண்மையான போராளிகள் இல்லை. சுயநலவாதிகள். சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கருத்து சொல்கிறார்கள் என்றும் கண்டனம் எழுந்துள்ளது.அதே போல புரட்சி போராளிகள் என்று வெளியே நடித்துக்கொண்டு இருந்த ‛‛கப்சா காம்ரேட்''டுகளான கோவன், நந்தினி போன்றவர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாயே திறப்பதில்லை. இப்போது அவர்களது புரட்சி கருத்துகள் எங்கே போய் புதைந்துகொண்டது என தெரியவில்லை.