24 special

போதும் இனி தாங்காது..! அலறிதுடிக்கும் திமுக அமைச்சர்..!

Senthil balaji,muthusamy
Senthil balaji,muthusamy

செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத்த தீர்ப்பு துறை அமைச்சராக இருந்த பொழுது டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு செந்தில் பாலாஜியும் எங்கே அப்படி நடக்கிறது எனக்கு காட்டுங்கள் என்று கோபத்துடன் பதிலளித்தார். பின்னர் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு அதிக ரூபாய் வசூலிக்கப்படுவதை மது பிரியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோக்கள் வைரலான சில நாட்களிலேயே வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டில் இறங்கியது. 


அதன் பின்னர் அவர் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த பணமோசடி வழக்கிற்காக அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கி ஆவணங்களை கைப்பற்றி கைது செய்து தற்போது நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. பிறகு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு அமைச்சர் பொறுப்புகளும் பறிக்கப்பட்டு இரண்டு வெவ்வேறு அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

திமுகவின் முக்கிய அமைச்சராகவும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாகவும் தன்னிடம் இரண்டு அமைச்சர் பொறுப்புகளை சுமந்து கொண்டு அதிகார மிகுந்த அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருந்த ஒருவரையே டாஸ்மாக் துறை இன்று ஒன்றும் இல்லாதவர் போன்று ஆக்கிவிட்டது. இந்த நிலையில் டாஸ்மார்க் துறையில் இருந்து மற்றுமொரு பிரச்சனை வெடித்தால் ஆட்சி தாங்காது என உணர்ந்து அமைச்சர் முத்துசாமி தற்போது டாஸ்மார்க் துறையின் மூலம் லாபம் பெறாவிட்டாலும் பரவாயில்லை என்ற நடவடிக்கைகளில் இறங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. 

அதாவது தமிழ்நாட்டில் முன்பு விற்பனையான டாஸ்மார்க் விற்பனை விகிதத்தில் 25 சதவீதம் வரை தற்போது குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, சட்டவிரோதமாக இதுவரை தமிழ்நாட்டில் இயங்கி வந்த 2000-க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் பார்கள் மூடப்பட்டது மேலும் காவல்துறையினர் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மது பாட்டில்களின் விற்பனையையும் தற்போது கண்காணித்து குறைத்துள்ளனர் மற்றும் சமீபத்தில் 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட செய்தியும் டாஸ்மாக் துறையில் விற்பனை குறைந்ததற்கு காரணங்களாக கூறப்படுகிறது. 

அதாவது செந்தில் பாலாஜி கைதாகி உள்ள நிலையில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முத்துசாமி டாஸ்மார்க் விற்பனையை பற்றியும் அத்துறையிலிருந்து வருமானத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை பற்றியும் கண்டு கொள்ளாமல் இத்துறையில் இருந்து தமிழக அரசுக்கு எந்த ஒரு அவப்பெயரும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனத்தை செலுத்தி அதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் தமிழக டாஸ்மாக் கடைகள் இயங்கி நடைபெற்று வருவதால் தான் வழக்கமாக கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடி வரை டாஸ்மாத்துறையில் இருந்து பெறப்பட்ட வருமானத்தில் ரூபாய் 35 கோடி வரை குறைந்துள்ளதாக செய்திகளில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த நிலையும் சிறிது காலத்திற்கு தான் நீதிமன்றத்தில் இருந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் பற்றிய வழக்கு தீர்ப்பை எட்டியதும் புதிய டெண்டர்கள் விடப்பட்டு வழக்கம்போல் தனது வருமானத்தை டாஸ்மாக் துறை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் அமைச்சர் முத்துசாமி தனது நெருங்கிய வட்டாரங்களில் 'டாஸ்மார்க்கில் லாபம் குறைந்தாலும் பரவாயில்லை 500 கடைகள் என்ன 1000 கடைகள் கூட மூடினாலும் பரவாயில்லை ஆனால் அமைச்சரவைக்கு இதனால் எந்த அவப்பெரும் வந்து விடக்கூடாது, மேலும் ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது அப்படி வந்தால் நான் காலி' என்றும், 'அதனால் என்ன குறைந்தாலும் பரவாயில்லை டாஸ்மாக்கில் ஒரு தவறு நடக்க கூடாது' என்றும் கூறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.