முதலில் எல்லாம் கையில் பணம் வைத்திருந்தால் மட்டுமே கடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால் அவற்றை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் அதற்கு பிறகு வங்கிகளில் கொடுக்கப்படும் காடுகளை வைத்து தேவையான பொருட்களை வாங்கி அந்த காடுகளில் மூலம் பணங்களை செலுத்தி வந்தனர். தற்போது அனைத்து துறைகளிலும் டெக்னாலஜி எப்படி வளர்ந்து கொண்டே செல்கிறதோ அதேபோலதான் பண பரிமாற்ற முறையிலும் புதிய புதிய டெக்னாலஜிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஜிபி போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி அதன் மூலம் படங்களை பரிமாற்றும் முறை ஆகும்.
தற்போது உள்ள டெக்னாலஜி உலகத்தில் எல்லாவற்றிலும் அப்டேட்டுகள் உருவாகிக்கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த கூகுள் பேய் என்பது மறுக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. முதலில் கையில் பணம் வைத்துக்கொண்டு கடைகளுக்கு சென்றவர்கள் தற்போது கையில் பணம் இல்லாவிட்டாலும் கூட தங்களின் மொபைல் ஃபோன்களை எடுத்துக்கொண்டு தைரியமாக கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்த கூகுள் பேய் என்பது முழுக்க முழுக்க மொபைல் ஃபோனையும் வங்கிக் கணக்கையும் அடிப்படையாக வைத்து யாருக்கு பணத்தை பரிமாற்ற வேண்டுமோ அவர்களுக்கு ஈசியாக பணத்தை அனுப்பும் ஒரு முறையாக இருந்து வருகிறது.
இந்த கூகுள் பேய் மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் போன் நம்பர் மட்டும் இருந்தால் போதும். மேலும் அவர்களும் கூகுள் பே-வில் கணக்கு வைத்திருந்தால் போதும். பணத்தினை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் போன் நம்பரையோ அல்லது அவர்களின் QR கோடுகளையோ ஸ்கேன் செய்து அவர்களுக்கு அனுப்ப வேண்டிய பணத்தினை டைப் செய்து அதன் பிறகு ரகசிய நம்பரை பதிவு செய்து அவர்களுக்கு ஈசியாக பணத்தினை பரிமாற்றம் செய்து விடலாம். இந்த google pay மூலம் பணத்தினை பரிமாற்றம் செய்வது வங்கிகளில் சென்று பணத்தினை பரிமாற்றுவதை விட மிகவும் சுலபமாக இருப்பதால் படிக்காதவர்கள் கூட இந்த பரிமாற்ற முறையை எழுதி கற்றுக்கொண்டு எவ்வித அலைச்சலும் இல்லாமல் இருந்த இடத்திலேயே யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்!! ஆனால் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் தற்போது ஸ்மார்ட் போன் இல்லாமலேயே ஒருவர் google தேவை பயன்படுத்தி பணத்தை பரிமாற்றம் செய்கிறார்!! அது எப்படி என்று விரிவாக காணலாம்!!தற்போது உள்ள உலகில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு சிலர் மட்டும்தான் தற்போது பட்டன் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த கூகுள் பேவை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பட்டன் போனிலும் google pay-வை பயன்படுத்தி பணத்தினை பரிமாற்றம் செய்யலாம் என்று தற்போது ஒருவர் நிரூபித்துள்ளார்.
அது எப்போதும் நாம் எப்படி க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்வோமோ அதுபோலவே அவர் பட்டன் போனில் உள்ள கேமராவை பயன்படுத்தி கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து அதன் பிறகு ரகசிய எண்ணையும் பணம் எவ்வளவு பரிமாற்ற வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு ஓகே செய்கிறார். உடனே பணம் பரிமாற்றம் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தியும் அவரின் மொபைலுக்கு வந்து விடுகிறது. இதனை பார்க்கும் பொழுது பட்டன் போன் வைத்திருப்பவர்கள் கூட எளிமையாக google pay-வை பயன்படுத்தி பழத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அனைவரின் மனதிலும் தோன்றுகிறது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!