24 special

நீதிபதி இருக்கை அருகில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்..! வீடியோ வெளியிட்ட ஊடகம் மீது நடவடிக்கை!

musilm , court
musilm , court

கர்நாடகா : நீதிமன்றத்தில் நீதிபதிகள் இருக்கை அருகே யாருக்கும் அனுமதியில்லை. இது என்றுமே எழுதப்படாத விதி. இது நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் யாருக்குமே அனுமதிகொடுக்கப்படாமலேயே இருந்தது. 


இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கை மேடையில் இருபெண்கள் தொழுகை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 15 அன்று ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி மாநில செய்திதொடர்பாளரான மோகன் கவுடா ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். தனது ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த அவர் " கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கை  அருகே இஸ்லாமிய பெண்கள் இருவர் தொழுகை நடத்தியுள்ளனர். மாண்புமிகு கர்நாடக டிஜிபி பிரவீன், மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா மேற்கு மற்றும் மத்திய டிஜிபிக்கள் உயர்நீதிமன்ற விதிகளை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்களா,

விதிகளை மீறியது மற்றும் நீதிமன்ற வளாகத்தை தவறாக பயன்படுத்தியதாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா" என கேட்டிருந்தார். எந்த பிரபல ஊடகமும் இந்த செய்தியை வெளியிடாத நிலையில் அவரது டீவீட்டை பகிர்ந்து சம்வதா எனும் செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டிருந்தது.

இதனிடையே 16 மே 2022 ல் நடந்த இந்த சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொள்ளாமல் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி வீடியோ எடுத்ததாக சம்வதா செய்தி சேனல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றவியல் அத்துமீறல் 447பிரிவு, பகை வெறுப்பு அல்லது தீங்கு விளைவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் செயல்கள் 505(2) ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகாரை நீதிமன்ற பொறுப்பு பதிவாளர் என்.ஜி தினேஷ் பெங்களுர் விதான் சௌதா காவல்நிலையத்தில் அளித்திருந்தார். மேலும் கர்நாடக தின நாளிதழான ஹோசடிகந்தா வழக்கறிஞர் புட்டரேயா கூறுகையில் " உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நீதிபதிகள் பென்ச் அருகே தொழுகை நடத்தியுள்ளனர். இது ஒரு விதிமீறல். தொழுகை நடத்தியது தொடர்பாக இரு பெண்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் தினேஷ் அவர்களிடமும் இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்" என புட்டரேயா கூறியுள்ளார்.