காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அயல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதில் மிகவும் ஆர்வம் உடையவர். அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தியை பார்க்கலாம், தேர்தல் பிரச்சாரம் முடிந்தால் ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுவிடுவார் என சில நேரங்களில் காங்கிரஸ் கட்சியினரே கூறுவர், அந்த அளவில் இருக்கும் ராகுலின் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம்!
2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதம மந்திரி மோடி குறித்து அவதூறாக பேசியது பாஜகவின் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. பிரதம மந்திரி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதால் குஜராத் மாநிலம் சூரத்தில் ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது.மேலும் இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது.இந்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையில் இருக்கும் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில் இந்த நடை பயணத்தில் தேசிய, மாநில மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். “பாரத் ஜோடோ யாத்ரா”.என்ற பெயரில் ஆரம்பித்த நடைப்பயணத்தை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3700கிமீ வரை பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவித்தன..
இந்த நிலையில் கடந்த வாரம் முன்பு கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானதை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். மேலும் அவரது இறுதி சடங்கு கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்ப்ளி செயின்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு தொகுதியில் முன்னாள் எம்பி ஆக இருந்த காரணத்தினால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக கேரளாவிற்கு சென்றார்.
கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானதை தொடர்ந்து இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லிக்கு திரும்பவில்லை.மற்ற தலைவர்கள் டெல்லி திரும்பிய நிலையில் ராகுல்காந்தி டெல்லி திரும்பாதது அனைத்து கட்சியினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது என டெல்லி தகவல்கள் கூறின! .இதன் பின்னணியை விசாரித்த போது”பாரத் ஜோடோ யாத்ரா” நடைபயணம் சென்றதால் மூட்டுவலி ஏற்பட்டு கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.. ராகுல் காந்திக்கு அந்த வைத்தியசாலையின் தலைமை மருத்துவர் மாதவன் குட்டி வாரியர் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது .
மேலும் ஒரு வார காலம் கேரளாவில் உடல்நலம் சரியாகும் வரை தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறாக ராகுல்காந்தி மீது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூடத்தொடரில் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபடுவர் என காங்கிரஸ் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இப்படி ராகுல் ஒரு வாரம் கேரளத்தில் தங்குவது டெல்லி காங்கிரஸ் வட்டத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவாரம் வரை இந்த சிகிச்சையை பெறும் ராகுல் காந்தி குணமடைந்தவுடன் டெல்லி திரும்ப வாய்ப்பு இருப்பதாக கேரளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.