Politics

சுய புத்தியை காட்டிய செந்தில் தமிழகத்தில் இப்படியும் ஒரு ஜென்மமா?

சுய புத்தியை காட்டிய செந்தில் தமிழகத்தில் இப்படியும் ஒரு ஜென்மமா?
சுய புத்தியை காட்டிய செந்தில் தமிழகத்தில் இப்படியும் ஒரு ஜென்மமா?

தமிழகத்தில் பல்வேறு ஊடக துறையில் பணியாற்றும் நபர்கள் இருக்கிறார்கள், இந்திய தேசியம், தமிழ் தேசியம், திராவிடம் என பல்வேறு கொள்கை கொண்ட பத்திரிகையாளர்கள் பத்திரிகை துறையில் பணியாற்றும் நபர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஊடகம் செய்தி என்று வந்துவிட்டால் தங்கள் சுய லாபம் வெறுப்பு ஆகியவற்றை தள்ளிவைத்துவிட்டு பணியாற்ற கூடிய நிலையில் இருப்பவரே உண்மையான பத்திரிகையாளன்.


அப்படி இருக்கையில் ஒரு சிலரின் செயல்பாடு பொது மக்களை முகம் சுழிக்க வைக்கின்றன, ஆதாரத்துடன் குற்றசாட்டுகள் வைக்கப்பட்ட காரணத்தால் தனியார் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியவர் செந்தில், இவரின் பொறுப்பற்ற சமூக ஊடக பதிவின் காரணமாக வேலை இழந்தார், இவர் வேலை இழந்த சில நாட்களில் புதிய யூடுப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

அதில் திமுக மற்றும் அதன் கூட்டணிகளை தவிர்த்து பாஜக, அதிமுக, பாமக, நாம் தமிழர், ரஜினி, கமல் என அனைவரையும் விமர்சனம் செய்து வந்தார், தன்னை தீவிர திமுக ஆதரவாளராக மாற்றி கொண்டார் செந்தில், இந்த நிலையில் அரசியல் வாதிகள் தவிர்த்து ரங்கராஜ் பாண்டேவை விமர்சனம் செய்து வந்தார்.

பாண்டே பெயரை உச்சரிக்காமல் மறைமுகமாக விமர்சனம் செய்து வந்தார் செந்தில், இந்நிலையில் பாண்டே கொரோனா பெரும் தொற்று ஒன்றும் வெல்ல முடியாத நோய் அல்ல ஒரு நாளில் விபத்தால் மரணமடையும் நோயாளிகள் எண்ணிக்கை எத்தனை, கொரோனவால் மரணமடையும் நோயாளிகள் எண்ணிக்கை எத்தனை என்பதை விளக்கம் கொடுத்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் செந்தில் அதில் விபத்தில் எத்தனை பேர் சாகிறார்கள்? என்று கேட்பதுதான் சாணக்கியத்தனமா ?விபத்தும் ஒரு பெருந்தொற்றும் ஒன்றா ?  ஒருவருக்கு விபத்து எனில், அவர் குடும்பமோ, நட்போ, சமூகமோ கூடவே இருந்து அவரை மீட்க முடியும். கொரோனா பெருந்தொற்று அப்படியா ? எப்படி இந்த அளவிற்கு மனசாட்சியற்று பேச முடிகிறது? என வினவியுள்ளார்.

இங்குதான் செந்திலின் சுய புத்தி தெரிவதாக நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர், பாண்டே தெரிவித்தது கொரோனா நோய் இறப்பு விகிதம் நம்மை மிரள செய்வது உண்மை இல்லை நாம் தைரியமாக கையாள வேண்டும் என பேசி ஒப்பீடு செய்து இருந்தார் ஆனால் செந்தில் அதையும் குற்றம் சுமத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாண்டேவை பலமுறை செந்தில் விமர்சனம் செய்தும் அவர்(பாண்டே ) கொண்டுகொள்ள கூட இல்லை அப்படி இருக்கையில் தொடர்ந்து சீண்டி யாருக்கு தனது விசுவாசத்தை கட்டுகிறார் செந்தில் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் அவரது பதிவிற்கு பத்தி கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திமுக ஆதரவு தெரிவித்த பின்பு ஸ்டெர்லைட் குறித்து செந்தில் வாய் திறக்காத மர்மம் என்ன எனவும் சிலர் கேள்வி எழுப்பி செந்திலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

முழுக்க முழுக்க திமுகவின் சொம்பாக மாறிய செந்திலிடம் கேள்வி கேட்பதும், அவரது கருத்தை பார்ப்பதும் ஒன்றிற்கும் பயனில்லாத விஷயம் என்ற முடிவிற்கு பலர் வந்து இருப்பது செந்திலின் பொறுப்பற்ற செயலால் தான் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது,