Tamilnadu

பட்டி தொட்டி எங்கும் பரப்பப்படும் பாடல்... 'பாட்டே' போட்டுட்டாங்களா செந்தில்பாலாஜி தரப்பு ஷாக் ! வைரலாகும் இரண்டாவது பாடல் !

annamalai senthulbalaji
annamalai senthulbalaji

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வகிக்கும் மின்வாரிய துறையில் ஊழல் நடைபெறுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார் , மேலும் ஒப்பந்த காரர்களிடம் நிலுவை தொகையை வழங்க 4% கமிஷன் வாங்குவதாக குறிப்பிட்ட அண்ணாமலை அதற்கான வங்கி பரிமாற்ற புகைப்படத்தை வெளியிட்டார் , இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது .


ஆளும்கட்சி அமைச்சர் செந்தில் பாலாஜி அலறி அடித்துக்கொண்டு எந்தவித ஊழலும் நடைபெறவில்லை அண்ணாமலை வெளியிட்டது ஆதாரமே இல்லை , முறையான ஆவணங்களை வெளியிட வேண்டும் என கூறினார் , இல்லை என்றால் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தார் பாலாஜி , இதையடுத்து அண்ணாமலை  நாங்கள் வெளியிட்ட தகவல் சரியானது , bgr எனும் தனியார் நிறுவனத்தை வாங்கி வளர்க்க திட்டமிட்டது உண்மை எனவும் மன்னிப்பு எல்லாம் கேட்கமுடியாது நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் சந்திக்க தயார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார் .

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி அண்ணாமலை மண்டையில் ஒன்னும் இல்லை களிமண் எனவும் இந்த விவகாரத்தை இதோடு முடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் ,மேலும் ஒருமையில் பதில் அளித்தார் , இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை களிமண்ணில் பிள்ளையார்  செய்து புண்ணியம் தேடலாம் , செந்தில்பாலாஜி "திருட்டு மண்" பாவம்தான் சேரும் என குறிப்பிட்டார் .

இப்படி இருவருக்கும் இடையே மாறி மாறி வார்த்தை 'போர்" நீண்டு கொண்டு இருக்க இதை கவனித்த நெட்டிசன்கள் பாட்டே போட்டுவிட்டனர் , அதாவது தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடலை போட்டு அதில் அணிலு கடிச்சதால கரண்டு இல்லைனு சொன்னாரு யாரு ? கரூர் காரரு .....இன்னைக்கு என்னடானா கரண்டு வாங்குறாரு பாரு bgr u .....நா நீங்க கமிஷன் அடிச்சீங்களானா இல்ல அடிக்க போறீங்களான ....சரமாரி கேள்வி கேட்ட நீ காண்டு ஆவியானா ....பல வருஷமாவே உங்க லட்சணம் தெரியமுனா ...சரமாரி கேள்வி கேட்டா நீ காண்டு ஆவாதானா .... என பாடியுள்ளனர் .

இந்த பாடல் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது .. இதுவரை மீம் ட்ரோல் என சென்று கொண்டிருந்த நெட்டிசன்கள் இப்போது பாடலாகவே பாடி  அமைச்சர் செந்தில்பாலாஜியை கலாய்த்து இருப்பது அவரது ஆதரவாளர்களை காண்டாக்கியுள்ளது , இதற்க்கு முன்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நெட்டிசன்கள் வெளியிட்ட பாடல் வைரலான நிலையில் தற்போது செந்தில் பாலாஜி குறித்து வெளியான இரண்டாவது பாடலும் வைரலாகி வருகிறது . படலை பார்க்க கிளிக் செய்யவும் .