Tamilnadu

மெண்டல்களுக்கு இடமில்லை மறுத்த பாஜக ! என்ன பேசிட்டாருன்னு இப்படி கழுவி ஊத்துறாங்க செந்தில் தரப்பு கவலை !

Annamalai and senthil
Annamalai and senthil

திமுக அனுதாபி செந்தில் நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, தன்னை பத்திரிகையாளராக அடையாளப்படுத்தி கொண்டிருப்பவர் செந்தில் என்ற செந்திவேல் இவர் தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்வதிலும் பாஜக குறித்து வீடியோ வெளியிடுவதற்கு என்றே தனியாக யூடுப் சேனல் நடத்தி வருகிறார்.


நேற்றைய தினம் பாஜக சார்பில் கோவில்களை வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டார், அதில் பெட்ரோல் விலையை மோடி  ஏற்றி விட்டார் என வாய் கூசாமல் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார், எண்ணை நிறுவனங்களே பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் என காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தை மறந்துவிட்டார் செந்தில்.

இது ஒரு புறம் இருக்க பாஜக தலைவர் அண்ணாமலை உண்மையான IPS ஆக இருந்தால் காஸ் விலை ஏன் ஏறுகிறது என விளக்கம் கொடுக்க வேண்டும் என செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு அண்ணாமலை பதில் கொடுத்தால் தான் பாஜகவில் இணைய தயார் எனவும் செந்தில் தெரிவித்துள்ளார், மதம் மதம் என பித்து பிடித்து அலையாதீர்கள் எனவும் செந்தில் பேசியுள்ளார்.

இந்த நிலையில் செந்திலை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்  ஆட்சிக்கு வந்தால் காஸ் விலை 100 ரூபாய் குறைப்போம் என சொன்ன ஸ்டாலினை கேள்வி கேட்க துப்பு இருக்கா? GST உள் இருப்பதால் தான் காஸ் விலை 1000 ரூபாய்க்குள் உள்ளது இல்லை என்றால் அதனை தாண்டிவிடும் இந்த பொது அறிவு கூட இல்லாமல் பேசுவது ஏன் எனவும் கடுமையாக சாடி வருகின்றனர்.

நீங்கள் பாஜகவிற்கு வருவதை எந்த பாஜக தொண்டனும் விரும்பமாட்டான், முதலில் கோவில் முக்கியமா என கேள்வி கேட்கும் செந்திலே கோவில் வருமானத்தில் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது என தெரியுமா? சமீபத்தில் மொட்டை போட்டு கொண்டீர்கள் எங்கு என விளக்கம் கொடுக்க முடியுமா? கோவிலில்தானே?

கொஞ்சமாவது அரசியலை தெரிந்து கொள்ளுங்கள் பாஜக கேட்பது டாஸ்மாக், தியேட்டர், உல்லாச விடுதிகள்  என அனைத்தும் திறந்த நிலையில் ஏன் கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு என கேட்கிறார்கள் அதை தெரிந்தால்தான் உங்களுக்கு சீப்பு தேவைப்படாதே என நக்கலாக பதில் அளித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்! இந்நிலையில் பாஜகவினர் சிலர் தங்களது முகநூல் பக்கத்தில் மெண்டல்களுக்கு பாஜகவில் இடமில்லை தாங்கள் வேறு ஏதேனும் இடத்தை பார்த்து கொள்ளுங்கள் என செந்திலுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் செந்தில் வெளியிட்ட வீடியோவிற்கு கிழே அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர், தனக்கு ஆதரவான கமெண்ட் இருக்கும் என செந்தில் பார்த்தால் முக்கால்வாசி நபர்கள் மிகவும் மட்டமான முறையில் செந்திலை கழுவி ஊற்றி வருவது செந்திலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமெண்ட்ஸ் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.