Tamilnadu

வைரலாகும் செய்தி உண்மையா? ரத்து செய்தாரா ராகுல்..முறிகிறதா திமுக கூட்டணி?

rahul and stalin
rahul and stalin

முன்னணி நாளிதழ் தினமலர் வெளியிட்ட செய்தி பல்வேறு அதிர்வலைகளை தமிழக அரசியலில் உண்டாகி இருக்கிறது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் தண்டனைக்கு பிறகு விடுவிக்க பட்டார், இந்த சூழலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்றது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.


முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு கொடுக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்த நபரை முதல்வர் கட்டிப்பிடித்து வரவேற்பதா? என பலத்தராபிலும் கண்டனம் எழுந்துள்ளது, தீவிர காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் இந்த சூழலில் தான் ராகுல் காந்தி திமுகவிற்கு விடுத்த அழைப்பை ரத்து செய்துவிட்டதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். இதில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் ரத்து செய்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.'பிரிட்ஜ் இந்தியா' என்ற அமைப்பு சார்பில், லண்டனில் 'இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று நடந்தது.

இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ். மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க., சார்பில் அக்கட்சி எம்.பி., திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த விவகாரத்துக்குப் பின், திருச்சி சிவா பெயரை, ராகுல் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மாநாட்டை தவிர, கேம்பிரிட்ஜ் பல்கலையில், வரும் 23ல், 'இந்தியா - 75' என்ற தலைப்பில் ராகுல் பேசுகிறார் எனவும் தினமலர் குறிப்பிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து திமுக காங்கிரஸ் கூட்டணியில் கடும் அதிர்வலை உண்டாகி இருக்கிறது, பல காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர், இந்த சூழலில் ராகுல் காந்தி திமுகவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இருக்கட்சிகள் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

நாளிதழில் வெளியான செய்தி குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வெளிப்படையாக வெளியில் சொன்னால் மட்டுமே உண்மை தெரியவரும்.