முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை காலம் நிறைவு பெற்று வெளிவந்தார், இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் குற்றம் நிரூபணம் செய்யபட்ட குற்றவாளியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்பு செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது, பாஜக தலைவர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர், தமிழக காங்கிரஸ் சார்பில் மவுன அஞ்சலி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அக்கட்சி அமைதியானது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ராஜிவ் காந்தி புகைப்படத்தை பகிர்ந்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் நெஞ்சம் மறப்பதில்லை.. நெஞ்சு பொறுக்குதில்லை..வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உன்னை வஞ்சகம் சாய்த்ததே.. நெஞ்சம் மறப்பதில்லை..நெஞ்சு பொறுக்குதில்லை என தெரிவித்து இருந்தார்.
இதனை ரிட்விட் செய்த நாராயணன் திருப்பதி அவரது முகநூல் பக்கத்தில் "நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சு பொறுக்குதில்லை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவனை வஞ்சகம் செய்தவனை நெஞ்சிலே சாய்த்து கொண்டதை நெஞ்சம் மறப்பதற்கில்லை நெஞ்சு பொறுக்குதில்லை" என்றே இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை கட்டிப்பிடித்து வரவேற்றதை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி மொத்தத்தில் பேரறிவாளன் விடுதலை மூலம் காங்கிரஸ் பெரும் சிக்கலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.