தமிழக பாஜக செயலாளர் சுமதி வெங்கடேசன் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தமிழக பாஜகவை சேர்ந்த சுமதி வெங்கடேசன் சமீபத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கல்யாண் ராமானுக்கு ஆதரவாக அவரது வீட்டிற்கு கட்சியினர் மற்றும் வழக்கறிஞர் உடன் சென்றார்.
அப்போது ஏன் நள்ளிரவில் தீவிரவாதியை போல் கல்யாணராமனை கைது செய்யவேண்டிய அவசியம் என்ன? என்ன குற்றசாட்டு அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார் மேலும் துணை நடிகையை பேசியது தவறு என்றால் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய துணை நடிகை மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதோடு கல்யாணராமனை கைது செய்தால் இது போல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள ஆளும்கட்சி மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை நாங்கள் கல்யாணராமனை கைது செய்ய அனுமதிக்க முடியாது என பேசினார் சுமதி, இதற்கிடையில் காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் என்றும் பாராமல் அவரை கையை ஓங்கி அடிக்க பாய்ந்தார்.
சுற்றியுள்ள பாஜகவினர் காவல்துறையினர் தாக்குதல் அவர் மீது படாதவாறு காப்பாற்றினர், பெண் என்றும் பாராமல் அடிக்க பாய்ந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணியல் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இதற்கு இடையில் ஏன் கல்யாண ராமனை 30 மேற்பட்ட போலீசாரை நள்ளிரவில் குவித்து கைது செய்யவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சுந்தரவள்ளி போன்றோரை கைது செய்யாத தமிழக காவல்துறை, கேள்வி எழுப்பிய பாஜக மாநில செயலாளரை அடிக்க பாய்ந்த சம்பவம் தமிழக காவல்துறை மீதான மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது, காவல்துறை தலைவராக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு தனது முதல் அறிக்கையில் காவல்துறையினர் பொதுமக்களை ஒருமையில் அழைப்பது, மிரட்டுவது பொன்ற எந்தவிதகாரியத்திலும் ஈடுபட கூடாது என அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால் அவற்றை எதையும் பின்பற்றாமல், கேள்வி எழுப்பிய பெண்ணை அடிக் கபாய்ந்துள்ளனர் காவல்துறையினர், இதே போன்ற ஒரு செயலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதோ அல்லது திமுக கூட்டணியில் உள்ள கட்சியினரின் பெண் நிர்வாகிகள் மீதோ தமிழக காவல்துறை அடக்க முறையை மேற்கொள்ள முடியுமா? என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமியை கைது செய்ய சென்ற அம்மாநில போலீசார் எவ்வாறு மூர்கத்தனமாக நடந்து கொண்டனரோ அதற்கு சற்றும் குறையாமல் தமிழக போலீசாரின் செயல் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் பாஜக பொது செயலாளர் சுமதி வெங்கடேசனை அடிக்க பாய்ந்த காவல்துறை அதிகாரி யார் அவரின் பின்புலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடீயோவை பார்க்க கிளிக்