ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள், இந்துக்கள் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை பயங்கரவாதிகள் செயல்படுத்து வருகின்றனர், இந்த சூழலில் ஜம்முகாஷ்மீரில் வசிக்கும் வேறு மாநில மக்கள் அந்த பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சமீபகாலமாக அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெளிமாநிலத்தினர், சிறுபான்மை மதத்தினர் ஆகியோரை அச்சுறுத்தும் நோக்கத்தில் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களின் வெறியாட்டத்தில் அடுத்தடுத்து 7 அப்பாவி மக்கள் பலியானார்கள்.
அவர்களின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட பாதுகாப்பு படையினரும் முழுஅளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கி சண்டைகள் நடந்து வருகின்றன. நடப்பு மாதத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்களில் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் மீது அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் வெளிமாநிலத்தவர்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்ற போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனிடையே, ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றிருக்கலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை பாதுகாப்பு படையினர் தரப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால், பயங்கரவாதிகள் தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரம் குறித்து மறைமுகமாக தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினருக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக பயங்கரவாதிகள் போக்கு காட்டி வருகின்றனர். தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இன்னும் பயங்கரவாதிகளை பிடிக்க முடியவில்லை. இதனால், தற்போது ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் சிறப்பு கமாண்டோக்களால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்களை பினைகைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் சதி செயலில் ஈடுபடலாம் என வந்த தகவலை அடுத்து வெளிமாநிலத்தைவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரவாதிகளை 4 நாட்களுக்குள் முழுவதும் சுட்டு வீழ்த்த ரகசிய உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், அதனையடுத்து ராணுவம் தீவிரமாக களத்தில் இறங்கி தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது, ஏதோ பெரிய சம்பவம் ஒன்று நடக்க போவது மட்டும் உறுதி என்கின்றன இராணுவ வட்டாரங்கள்.