எப்போதுமே சீமான் பேசும் போது யாரை எப்போது எதிர்த்து பேசுவார் என்றே கணிக்க முடியாது. ஆனால் அவர் பேசும் தமிழ் உச்சரிப்புக்கு மட்டும் மயங்காத இளைஞர்களே இல்லை என்றே சொல்லலாம். இப்படி எல்லாம் இருந்தவர் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு நூல் விடுவது போலவே பேசி வருவது அனைவராலும் கவனிக்கப்படுகிறது. பொதுவாகவே பாஜகவைத்தான் இந்துத்தா கட்சி என்ற விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல இந்துத்துவா பேச தொடங்கி விட்டது என விமரிசனம் கிளம்பி உள்ளது. அதன் காரணமாக தான் பாஜக வின் A டீம் நாம் தமிழர் கட்சி என விவாதம் நடைபெறுகிறது .
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,தற்போது தமிழர்கள் சமயம் சைவம் தான். கிறிஸ்தவமும் இஸ்லாமியமும் வெளிநாட்டு மதங்கள் என குறிப்பிட்டு உள்ளார் சீமான். நாம் அனைவரும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ.ரஹீம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சீமான் வீட்டை முற்றுகை விடுவாராம்.சீமான் பேசியது
நாங்கள் தமிழர்கள். எங்கள் சமயம் வேறு. எங்கள் வழிபாட்டு முறை வேறு. எங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் சமயமே வேறு. இதில் உறுதியாக இருக்கிறேன்.நாங்கள் சைவர்கள். சிவன், முருகனை வழிபடுகிறவர்கள். என்னுடைய மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிச் சென்ற போது என்ன கோத்திரம் என கேட்டனர். நான் சிவகோத்திரம் என்றேன். ஏனெனில் நாங்கள் சிவசமயம். எங்கப்பாவின் சொத்து பத்திரத்தில் சிவகோத்திரம் என்றுதான் எழுதி உள்ளது. வாங்க எங்க வீட்டில் காட்டுகிறேன்.
அன்றைக்கு சிவசமயம் என்றுதான் எழுதி இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுவதால் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். மாயோனை வழிபடுவதால் கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதை தூய தமிழில் மாலியம் என்கிறோம். வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பவுத்தன், சீக்கியன், சைவன், பார்சி என நாங்க எல்லாரும் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து அல்ல. வெள்ளைக்காரன்போட்ட சட்டப்படி இந்து. அதனை நான் ஏற்கலை எதிர்க்கிறேன் என சீமான் தெரிவிக்க அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
தொடர்ந்து பேசிய சீமான், கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். மரச்செக்கு என்னை தான் உடம்புக்கு நல்லது. அது மாதிரி தாய் மதம் திரும்புவது தன்காண் அனைவர்க்கும் நல்லது என்றும் குறிப்பிட்டு உள்ளார் .
சீமானின் இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி ரஜிஊன் சம்பத் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.. கடவுளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் தற்போது மனதளவிலும் கொள்கை அளவிலும் முழுதும் மாறி முருகனை முப்பாட்டன் என்கிறார். சிவனை பெரும்பாட்டன் என்கிறார். கண்ணனை கேவலமாக பேசிய சீமான், இன்று கிருஷ்ணனை மாயோன் என்கிறார். சீமானான் இந்த மாற்றத்திற்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார் அர்ஜுன் சம்பத் .