மஹாராஷ்டிரா : இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்துள்ள மஹாராஷ்டிரா அரசியலில் நாடகங்கள் இன்னும் முடிந்தபாடில்லை. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 34 பேர் கொண்ட ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான குழு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதை துணை சபாநாயகராக நர்ஹரி ஜிர்வால் அலுவலகத்தில் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பின்னடைவை விளைவிக்கும் விதமாக அமைச்சர் ஏக்நாத்ஷிண்டே துணை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை துணை சபாநாயகராக நர்ஹரி ஜிர்வால் நிராகரித்துள்ளார். அலுவலகத்தில் கொடுக்காமல் அனாமதேய மின்னஞ்சல் மூலம் அனுப்பியதால் நிராகரிக்கப்பட்டது என சபாநாயகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விஷயத்தின் கவன ஈர்ப்பை கருத்தில்கொண்டு அனுப்பட்ட மின்னஞ்சல் மற்றும் தகவல் தொடர்புகளை சரிபார்த்து அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து மனுவை ஏற்றுக் கொள்ளும்முன்னர் அதை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் என சபாநாயகர் வட்டாரங்கள் தெரிவித்தததாக செய்திகள் கூறுகின்றன.
இதனிடையே மின்னஞ்சல் தகவல் தொடர்பு மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கையொப்பமிட்டதாக கூறப்படும் 34 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் வந்து சமர்ப்பித்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும்வரை 22-6-22 அன்று அனுப்பப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு பொறுப்பேற்க முடியாது என சபாநாயகர் தரப்பில் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சரத்பவாரின் என்சிபி பார்ட்டியை சேர்ந்த துணை சபாநாயகரான ஜிர்வால் ஏக்நாத் ஷிண்டேவை நீக்கிவிட்டு அஜய் சவுத்ரி என்பவரை சிவசேனா சட்டசபை குழு தலைவராக நியமித்திருந்தார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என ஷிண்டே விமர்சித்திருந்தார். மேலும் சிவசேனா வின் லெட்டர்பேடில் ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் தற்போது சட்டமன்ற சிவசேனா தலைவர் அஜய் சவுத்ரி என்பதால் இந்த தீர்மானம் செல்லாது என அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கவர்னரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா அரசியலை மேலும் சிக்கலில் தள்ளியிருக்கிறது.