Tamilnadu

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு போட்டதற்கு இதுதான் காரணமா!!

savukku shankar
savukku shankar

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு அரசை நோக்கி தாறுமாறான கேள்விகளையும் விமர்சனங்களையும் ஒரு அரசியல் விமர்சகரால் முன்வைக்க முடியும் என்றால் அவர் சவுக்கு சங்கர் மட்டுமே, இவரைப் போன்ற மற்ற அரசியல் விமர்சகர்களும் சில கருத்துக்களை முன் வைத்துள்ளனர் ஆனாலும் நேரடியாக முதல்வர் மு க ஸ்டாலினையும் அமைச்சர் உதயநிதி மற்றும் ஒட்டு மொத்த திமுகவை குறித்த விமர்சனங்களை அள்ளி தெளித்தவர் சவுக்கு சங்கர்! இந்த நிலையில் பெண் காவல்துறை அதிகாரி குறித்து தவறுதலாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அவர் சமீபத்தில் கைதானார் அந்த கைதினை தொடர்ந்து இதுதான் நேரம் என்று காத்துக் கொண்டிருந்த பல மாவட்டங்களை சேர்ந்த போலீசார் சரமாரியாக சவுக்கு சங்கர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதோடு சவுக்கு சங்கர் வந்த வாகனத்தில் கஞ்சா பிடிபட்டதாகவும் கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து அவரது அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.


ஆனால் போலீஸ் அதிகாரிகள் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு போட்டதற்கான பின்னணியும் அலுவலகத்தில் சோதனை இட்டதற்கான பின்னணியும் வேறு என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் அதிமுகவினரின் தூண்டுதலால் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை விமர்சனங்களையும் சவுக்கு சங்கர் முன்வைத்து வருவதாக திமுக தலைமை நினைத்து வந்ததாகவும் ஆனால் பிறகுதான் திமுக தலைமைக்கு தெரிந்துள்ளது திமுகவில் உள்ள சில மூத்த நிர்வாகிகளே சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்பது! மேலும் அவர்கள் தான் கட்சிக்குள் நடக்கும் பல நடவடிக்கைகளையும் தவறுகளையும் ஆவணங்களுடன் சவுக்கு சங்கருக்கு அனுப்புகிறார்கள் என்பதும் கட்சி தலைமைக்கு தகவலாக சென்றுள்ளது.

இதனால் பல நாளாக சந்தேகத்திலும் எப்போது சிக்குவார் என்று நினைத்துக் கொண்டிருந்த திமுக தலைமைக்கு தற்போது வசமாக சிக்கியதால் எப்படியாவது அவரது அலுவலகத்தை சோதனையிட வேண்டுமே அப்பொழுதுதான் அவர்கள் லேப்டாப் மூலம்  யாரெல்லாம் திமுகவ இருந்து கொண்டே சவுக்கு சங்கருக்கு வேலை பார்த்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு சவுக்கு சங்கரை கஞ்சா வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து திட்டமிட்ட படியே காவல்துறையினரும் இதில் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கின் அடிப்படையில் அவரது அலுவலகத்தை சோதனை செய்வதாக சோதனையை மேற்கொண்டு சவுக்கு சங்கரி லேப்டாப்பையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி அப்படி கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் அதிமுக மற்றும் திமுகவில் இருந்து கொண்டே பல ஆவணங்களை சவுக்கு சங்கருக்கு பலர் கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்ததோடு யார் யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரமும் அதில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இவை அனைத்துமே திமுக தலைமைக்கும் சென்றுள்ளதாகவும் அதனால் எந்த நேரத்திலும் திமுக தலைமை சவுக்கு சங்கருக்கு தகவல்கள் கொடுத்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் அல்லது கட்சிகளில் இருந்து ஒதுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் திமுக தலைமைக்கு கிடைத்த தகவலின் படி சவுக்கு சங்கருக்கு தகவல்களை வழங்கியவர்கள் பட்டியலில் திமுகவைச் சேர்ந்த சில முக்கிய மற்றும் நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாகவும் நிச்சயம் அவர்கள் மீதும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அரசின் விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.