நாம் சாதாரணமாக நம்முடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தாலே எந்த நோயும் நமக்கு இருப்பது போன்று தோன்றாது ஆனால் மருத்துவமனைக்கு சென்று உடல் முழுக்க நாம் ஒரு செக்கப் செய்து விட்டு வந்தால் போதும் அடுத்த நாளிலிருந்து நமது நிம்மதி போய்விடும் என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது அதேபோல சில தனியார் மருத்துவமனைகள் விபத்தில் படுகாயம் அடைந்து அவசர சிகிச்சைக்காக வரும் பலருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை அவர்களை குணப்படுத்தி விடலாம் என்று பொய்யான நம்பிக்கைகளை கூறி இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு திடீரென அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறும் பல செய்திகளையும் கண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி அதற்காக பல லட்சங்களையும் சில மருத்துவமனைகள் மருத்துவ கட்டணமாக வசூலித்துள்ளது.
இதைத் தவிர அவசரத்திற்காக அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்று அருகில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்தையும் தவற விட்டு பிறகு தான் ஒப்பந்தமிட்ட மருத்துவமனையை அடைந்து அதிலும் பல உயிர்கள் பறிபோய் இருக்கும் அவல செய்திகளையும் பார்த்திருக்கிறோம்! இப்படிப்பட்ட அவல காட்சிகளை சில படங்களும் வெளியிட்டுள்ளது முதலில் ரமணா திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்த ஒருவரின் உடலை கொண்டு வந்து இவரை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று ஒரு மருத்துவமனையில் சேர்க்க அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இன்னும் 24 மணி நேரத்தில் கண் திறந்து விடுவார் என்று கூறி பல லட்சங்களை கட்டணமாக செலுத்துவார்கள் அதையும் அவர் செலுத்தி பிறகு உயிர் போய்விட்டது என்று இரண்டு நாளுக்கு பிறகு கூறுவார்கள்!
இந்த காட்சி படமாக்கப்பட்ட போது பொதுமக்கள் மத்தியில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இதே போன்ற ஒரு சம்பவம் தற்பொழுது நடந்திருப்பது செய்திகளில் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்த 29 வயதான பாஸ்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது விபத்தில் சிக்கி உள்ளார் விபத்தில் பாஸ்கரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட பாஸ்கருக்கு மூக்கு, கை மற்றும் நெற்றியில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது இதனால் அவசர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து பாஸ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட சிகிச்சையில் பாஸ்கரின் கையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் குடும்பத்தினர் ஸ்டான்லி மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாமல் பிரபல மற்றும் தனியார் மருத்துவமனையான சென்னை நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாஸ்கரை அனுமதித்துள்ளனர் அங்கு பாஸ்கரின் உயிருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை பாதிப்பும் இல்லை என்று குடும்பத்தினரின் எதிர்பார்ப்பிற்கிணங்க கருத்துகள் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் நம்பிக்கை அடைந்த குடும்பத்தினர் பாஸ்கருக்கான சிகிச்சைகளை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அடுத்த கட்ட சிகிச்சையின் பொழுதும் பாஸ்கரின் மூக்கு மற்றும் கைக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றபடி அவர் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற வகையில் மருத்துவர்கள் தெரிவித்து வந்துள்ளனர்.
அதோடு இப்படி ஏழு நாட்கள் பாஸ்கரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க, அதற்கு மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கு மேல் பாஸ்கர் குடும்பத்தினர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஞாயிறன்று பாஸ்கருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாஸ்கர் குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் தள்ளப்பட்டனர் ஏனென்றால் மகனின் உயிருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது அடுத்து இப்படி திடீரென்று இறந்துவிட்டார் என்ற செய்தி பாஸ்கரின் பெற்றோர்களை கதி கலங்க வைத்துள்ளது. மேலும் உடல் உங்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாஸ்கர் இழந்த அவரது குடும்பத்தினர் கடும் கோபத்தில் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குவிந்துள்ளனர் அப்பொழுது அவரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறும் கதறல்கள் தற்போது இணையத்தில் பலரை கலங்கடிக்க வைத்து வருகிறது.