
தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருபிபவர் மீது தொடர் விமர்சனமா வந்த நிலையில் உள்ளது. அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வரும் சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என சிறுபான்மையின மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை தமிழகத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வாழ்க்கையை தழுவிக் கதை எழுதியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தின் இறுதி பணிகள் மும்முரமாக சேது வருகின்றனர் படக்குழு. சிவகார்த்திக்கேயன் பிறந்தநாளன்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு டீசர் வெளியானது. இந்த படத்திற்கான டீசர் வரவேற்பு மக்களிடம் அதிகரித்தது. போதை பொருட்களை கொண்டு வரும் படம் மத்தியில் நாட்டை காப்பது போல் வரும் படம் அரிது என மக்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நகைச்சுவை கலந்த காதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். வழக்கமாக காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திக்கேயன் அமரன் படத்தில் ராணுவ வீரராக ஆக்ஷன் கலந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு எதிராக விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்களை அவதூறாக சித்தரித்துள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமரன் படத்தின் காஷ்மீர் மக்களின் விடுதலை பற்றி படம் பேசுகிறதா அல்லது அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா என்பதை படம் வந்த பின்பு தெரியவரும். இந்த நிலையில் 'அமரன்' பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கண்டித்து கும்பகோணத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிவகார்த்திகேயனை குன்டர் சட்டத்தில் கைது செய்யவும், கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை எரித்து கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை வந்தது அதன் பிறகு சின்னத்திரை நடிகர் ஒருவர் விமர்சனம் வைத்திருந்தார். தற்போது அவரது படத்திற்கு எதிராக பிரச்சனை கிளமிட்டுள்ளது அவர் மீது தொடர் சர்ச்சை வந்த வண்ணம் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.