தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற விவாதத்தை தனியார் தொலைக்காட்சி நடத்தியது, இந்த விவாதத்தில் திமுக சார்பில் சரவணன், வலதுசாரி நித்தியானந்தம், பத்திரிகையாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் நெறியாளராக தம்பி தமிழரசன் இருந்தார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இன்று இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் வெளியேறிய நாள் எங்களின் புனித நாள் என நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் பேசினார், அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என குற்றவாளி H ராஜாவை வைத்து கொண்டு புகார் அளிக்கிறார்கள் என ஏளனம் செய்தார்.
அதோடு மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்றவர் என பேசினார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது உண்மைக்கு மாறாக இப்படி ஒரு பொய்யை வன்னியரசு தெரிவித்துள்ளார் ,நீதிமன்றமே குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடிக்கு பங்கு இல்லை என தீர்ப்பு வழங்கிய நிலையில் வன்னியரசு பிரதமர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்விதமாக பொய் கருத்துக்களை கூறி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க நினைக்கிறார் எனவும் .,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசை கைது செய்யவேண்டும் என பாஜகவினர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருந்தனர் , அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது ,இவை தவிர்த்து மாவட்ட வாரியாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர் இதையடுத்து வன்னியரசு கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் திருமாவளவன் காலிற்கு கீழே அமர்ந்து கையில் நோட்டுடன் இருக்கும் பாகைப்படத்தை பகிர்ந்து
எத்தனை புகார்கள் கொடுத்து அச்சுறுத்த நினைத்தாலும்சனாதனத்தை நடைமுறைப்படுத்த துடிக்கும் RSSபாஜக எதிர்ப்பதில் பின்வாங்க மாட்டேன்.சனாதன-இந்துத்துவத்துக்கு எதிரான எனது யுத்தம் அம்பேத்கர் பெரியார் திருமாவளவன் வழியில் தொடரும் என திருமாவளவன் காலிற்கு கீழே பவ்வியமாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் .
வன்னியரசு இதற்கு முன்னர் ஒரு பேட்டி ஒன்றில் தமிழக காவல்துறைக்கு விடுதலை சிறுத்தைகளின் பழைய வரலாறு இப்போது இருக்கும் பலருக்கு தெரியவில்லை என கொடிக்கம்பத்தை நடும் வழக்கில் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது .நிலையில் தொடர்ந்து வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக பேசி வருவதால் அவரை காவல்துறை சமீபத்தில் சாட்டை துரைமுருகமனை கைது செய்தது போன்று கைது செய்யுமா ? முதலவரை விமர்சனம் செய்தது போன்று பிரதமரை அவதூறாக பேசிய வன்னியரசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன .