Tamilnadu

"எடுத்த சபதம் முடிப்பேன்" சசிகலா வருகைக்கு இப்படி ஒரு திட்டமா? உத்தரவு போட்ட ஸ்டாலின்!

sasikala
sasikala

தமிழகத்தில் இன்று பெரும் பரபரக்க பேசப்படும் ஒரு விஷயம் மெரீனாவுக்கு சசிகலா வருகை தான். அதிமுக முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரான சசிகலா இன்று அக்டோபர் 16 காலை சரியாக 10.35 மணிக்கு தி. நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்து மெரினா கடற்கரை நோக்கி புறப்பட்டார். இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் என்பதால் ராகு காலம் முடிந்து சரியாக 10.35க்கு தன் வீட்டிலிருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார் சசிகலா. 


இவருக்கு  ஆதரவு தெரிவிக்கும்  பொருட்டு வீட்டு வாசலில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அவரது காரின் இருமருங்கிலும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். அவரது காருக்கு பின் பல  கார்கள் அணிவகுத்து வர பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாக உள்ளது. இன்னும் சொல்லப்பயனால் சசிகலாவுக்கு  கட்சியில் இவளவு மவுசு உள்ளதா என பார்ப்போரை நினைக்க வைக்கிறது 

அவரது காரில் அதிமுக கொடி கட்டி," சிங்கம் ஒன்று புறப்பட்டதே" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இயல்பாடுகள் இருந்தது . மேலும் சசிகலா வீட்டு வாசலில் அவர் புறப்பட்ட பொழுது காருக்கு அருகே அண்ணாவின் படம் பொறிக்கப்பட்ட அதிமுக கொடிகளையே நிர்வாகிகள் ஏந்தியிருந்தனர்.

சசிகலா விடுதலை  ஆன உடன், பலவேறு  கோவிலுக்கு சென்று வந்தார். காரணமா.... அவரது ஜாதகப்படி  சில  பூஜைகள் செய்ய வேண்டி இருந்ததாம். அதுமட்டுமல்ல.... அப்பபோதைக்கு அவர் கட்சி தொடர்பில் ஆர்வம் காட்டக்கூடாது எனவும்  ஜோதிடர்கள் சொல்லி இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால்  தற்போது மீண்டும்  கட்சிக்கு பணியில் இறங்க சரியான நேரம்  என கனைத்து உள்ளார். இதன் காரணமாகத்தான்  தொண்டரகள் மூலம் ஆடியோ  கால் அரசியல்... பின்பு  தொலைக்காட்சிக்கு பேட்டி என அடுத்த கட்டத்தை அடைந்தார் சசிகலா....

இப்படி ஒரு நிலையில் தான் இன்று சசிகலா வீட்டில் இருந்து நேரடியாக நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியபடியால்... தி.நகர் சீனிவாசப் பெருமாள்- பத்மாவதி தாயார் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அதன் பிறகு மெரினாவை நோக்கி பயணமானார் சசிகலா.சசிகலா வருகையை ஒட்டி மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவகங்கள் இன்று அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் போன் விழாவையொட்டி மெரினாவில் அமைந்து இருக்கும் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் சிந்தியபடி மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடம் சென்று  சத்தியம் செய்து விட்டு தான் சிறைக்கு சென்றார். பின்னர் 4 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆன உடன் முதல் முறையாக ஜெயலலிதா நினைவிடம் வந்து  மீண்டும் சபதம் எடுத்து உள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை...தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஏற்கனவே காவல்துறைக்கு சசிகலா முறைப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து சசிகலா மெரினாவுக்கு வரும்போது எவ்வளவு கூட்டம் வரும் என்று சென்னை மாநகர போலீஸார், டிஜிபி மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கணக்கு கேட்டு பெற்றனர். அதன் படி  மெரினாவுக்கு ஐந்தாயிரம் பேர் வருவார்கள் என்று ரிப்போர்ட்  கிடைக்க, உளவுத்துறை கூடுதல் டிஜிபி மாவட்டந்தோறும் உள்ள எஸ்பிசிஐடி போலீஸார் மூலமாக வேன் மற்றும் கார் ஓட்டுநர் உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்களிடம் எவ்வளவு வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை யம் பெற்று உள்ளனர்.

அதில், வடமாவட்டங்களில் இருந்து அதிமுகவுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதைவிட அதிகமாக சசிகலாவுக்குத்தான் வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்றும் தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான பஸ் வேன் மற்றும் கார்கள் வருகிறது என்றும் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. நேற்று இரவு முதலே ரயில்கள் மூலமாகவும் பஸ்கள் மூலமாகவும் வரத்துவங்கிவிட்டார்கள், ஆனால் மேற்கு மாவட்டத்திலிருந்து மிக மிக குறைவாகவே ஆட்கள் வருவதாகவும் தகவல் கிடைத்து உள்ளது.

இதனையடுத்து “சசிகலா வரும்போது ட்ராபிக் ஜாம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அவங்களுக்கு போதுமான பாதுகாப்புகள் கொடுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். நிலைமை இப்படி  இருக்க முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ... சட்டப்படி அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும், எப்போதுமே எங்களுக்கு அம்மா ஜெயலலிதா அவர்கள் தான் .....இவங்க வெறும் சும்மா என  குறிப்பிட்டுஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.