தமிழகம் உட்பட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 2 அன்று நடைபெறுகிறது, வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆட்சியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
திமுக தலைமையும் அதே எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றன, இந்நிலையில் திமுக எடுத்த தேர்தலுக்கு பிந்தைய சர்வேயில் உறுதியாக திமுக 150 இடங்களுக்கு மேலே பெற்று வெற்றி பெரும் என ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் திமுக தலைமை அடுத்த தலைமை செயலாளர் முதல் அமைச்சர்கள் பட்டியல் வரை, முக்கிய தலைவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் என அனைத்தையும் முடிவு செய்து ஆட்சி அமைக்க தயாராகிவிட்டதாம்.
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சியில் முக்கிய பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மூலம் மத்திய அரசிற்கு திமுக தூது அனுப்பியுள்ளதாம், அதில் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் அனுமதி மறுக்க மாட்டோம், மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள மத்திய அரசு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவோம்.
RSS அணிவகுப்பு இந்து முன்னணி மாநாடுகளுக்கு மற்ற மத பண்டிகைகளுக்கு அனுமதி வழங்குவது போன்று வழங்குவோம் எனவும் இன்னும் பல கோரிக்கை மடல்களை அனுப்பியுள்ளது திமுக தலைமை, மேலும் 2ஜி விவகாரத்தை தள்ளி போடும்படியும் அந்த கோரிக்கையில் முக்கிய புள்ளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆக்ஸிசன் உற்பத்தி செய்ய ஆலையை திறக்கலாம் என திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பேசியது, நாங்கள் அனைத்திற்கும் தயார் என மத்திய அரசிற்கு சமீக்கை அனுப்பதான் எனவும் கூறப்படுகிறது, திமுக தனித்து ஆட்சி அமைத்தால் மத்திய அரசுடன் அதிமுகவை காட்டிலும் 2 மடங்கு நெருக்கமாக செல்ல திமுக தலைமை முடிவு செய்து இருப்பது அக்கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.