தற்போது எல்லா காடுகளையும் அழித்துவிட்டு அவற்றில் வீடுகளை கட்ட ஆரம்பித்து விட்டன. காடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து தற்பொழுது கட்டிடமாக மாறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் மரம் செடி கொடிகளுடன் வாழும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்றவை கூட காடுகள் இல்லாமல் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. விலங்குகளில் யானை போன்றவை காடுகள் அழிக்கப்படுவதால் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் அவ்வபோது வந்து அனைவரையும் பயன்படுத்தி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் விலங்குகளை எந்த ஒரு தவறும் சொல்ல முடியாது. அவைகள் வாழும் இடங்களை அளித்து மனிதர்கள் தான் இது போன்று கட்டிடங்களை கட்டி வந்து அவை வாழ்வதற்கு என்று இடமே இல்லாதது போல் செய்து விடுகின்றனர். எனவேதான் அதை பிற இடங்களை தேடி செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் மட்டும் வேறு ஒரு இடங்களில் தேடி செல்வது கிடையாது. பாம்பு போன்ற ஊர்வன வகையை சேர்ந்தவை கூட அவ்வப்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து விடுகிறது.
முதலில் எல்லாம் எங்கு பார்த்தாலும் மரணம் செடியும் நிறைய இருக்கும். அவற்றை பாம்புகள் போய் தங்கிக் கொள்ளும். மேலும் மரம் போன்றவற்றின் கிளைகளில் பாம்புகள் சுற்றிக்கொண்டு இருக்கும். ஆனால் தற்பொழுது மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவை தஞ்சம் அடைந்து விடுகிறது. வீடுகளில் உள்ள பாத்திரம், பானை போன்றவற்றிற்கு அடியில் சுருண்டு கிடக்கிறது. மேலும் வீடுகளின் மேற்குறைகள் மட்டும் ஓடுகள் போன்றவற்றிலும் பாம்புகள் மழைக்காலத்தில் சுற்றிக்கொண்டு இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். மேலும் வீட்டிற்கு வெளியில் நாம் கழட்டி வைக்கும் செருப்பு, ஷூ போன்றவற்றில் கூட பாம்புகள் போய் தங்கிக் கொள்கிறது.
எனவே ஷூ போன்றவற்றை அணிவதற்கு முன்பாக நன்றாக தட்டி பார்த்துவிட்டு தான் போட வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். மேலும் இதுபோன்று மக்கள் வசிக்கும் வீடுகளிலோ அல்லது இடங்களிலும் ஏதேனும் பாம்பு வந்து தங்கி இருப்பதை பார்த்து விட்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் அனைவரும் பயத்தில் இருப்பார்கள். ஆனால் தற்பொழுது ஒரு பாம்பு புது வகையான பொருளில் ஒளிந்திருக்கிறது. அந்தப் பாம்பினை எப்படி பிடிக்கின்றனர் என்பதை வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!
முதலில் எல்லாம் வீடுகளில் உள்ள பானை போன்றவற்றில் ஒளிந்து கொண்டிருந்த பாம்பு தற்பொழுது ஒரு படி மேலே சென்று ஹெல்மெட்டிற்குள் ஒளிந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஹெல்மெட் ஒன்றின் அடியில் பாம்பு ஒன்று ஒளிந்து இருக்கிறது. அதனை பாம்பு பிடிக்கும் ஒருவர் தட்டி தட்டி வெளியில் வர வைக்கிறார். அவர் அந்த ஹெல்மெட்டை தட்டதட்ட கொஞ்சம் கொஞ்சமாக தலையை தூக்கி அந்த பாம்பும் வெளியே வருகிறது. அதன் பிறகு அவர் ஒரு கம்பி போல ஒன்றை வைத்து அந்தப் பாம்பின் கழுத்தை சுத்துகிறார். ஆனால் இந்த பாம்பு அவரை மிகக் கோபத்துடன் பொருத்த வருகிறது. ஆனாலும் தொடர்ந்து அவர் அந்த கம்பியை வைத்து பாம்பினை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறார். இதுபோல அந்த வீடியோவின் காட்சி அமைந்திருக்கிறது.
எனவே வெளியில் செல்பவர்கள் ஹெல்மட்டை கண்ட இடத்தில் வைத்துவிட்டு அதன் பிறகு அணிந்து கொள்வதற்கு முன்பு உள்ளே ஏதாச்சும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அணிந்து கொள்வது மிகவும் நல்லது என்று தற்பொழுது இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.