Cinema

முதல் வாரத்திலே எலிமினேட்டான கண்டஸ்டண்ட்!! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!!

Cook with Comali
Cook with Comali

தொலைக்காட்சிகளில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்றுமே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பையும் சில தாக்கத்தையும் ஏற்படுத்தும் அந்த வகையில் பலரும் அனைத்து கஷ்டத்தையும் மறந்து சிரிக்க வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியாக மகிழ்ந்து பார்க்கப்படுகிற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி! இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்தவர்கள் சமையல் தெரியாதவர்களோடு இணைந்து சில டாஸ்கையும் வென்று அதில் சமைத்து காட்டி வருகிறார்கள். அதோடு நிகழ்ச்சியில் அரங்கேறும் காமெடி காட்சிகள் அனைத்துமே தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை எட்டி உள்ளது முதல் சீசன் இருந்து இன்று வரை நல்ல வரவேற்பையும்


பலரது ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகவும் விளங்குகின்ற இந்த குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொள்பவர்களுக்கும் நல்ல பேமை கொடுத்து வருகிறது. தொடர்ச்சியாக நான்கு சீசன்களை கண்டு வந்த குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் என்று தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த பொழுது, இதுவரை அனைத்து சீசன்களிலும் தொகுப்பாளராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு கூட்டணி இனி நிகழாது என்றும் ஐந்தாவது சீசனில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்களால் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி மற்றும் ஒரு பிரபல தனியார் டிவி ஒளிபரப்ப உள்ள நிகழ்ச்சிக்கு தாவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே சமயத்தில் குக் வித் கோமாளியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் தற்போது டாப் குக்கு தூப் குக்கு என்ற நிகழ்ச்சிக்கு பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குக் வித் கோமாளியின் சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்க தான் வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வியும் சந்தேகமும் இருந்து வந்ததாம், இருப்பினும் மக்கள் மத்தியில் உள்ள பேர் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பால் புது குழுவுடன் புத்தம் புதிய பொலிவில் தாமு மற்றும் மாதம் பட்டி ரங்கராஜன் ஆகியோரது கூட்டணியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை களம் இறக்கப்பட்டனர். போட்டியாளர்களாக திவ்யா துரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, வி டிவி கணேஷ், இர்ஃபான், பாண்டியன் டோர் சுஜிதா, சீரியல் நடிகர் வசந்த் வசீ தொகுப்பாளர் பிரியங்கா தேஷ் பாண்டே மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஷாலின் சோயா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் புதிய கோமாளிகளாக நான்கு பேரும் தற்போது குக் வித் ஷோவில் இணைந்துள்ளனர். இப்படி பெரும் எதிர்பார்ப்போடு கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்ட கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸின் சுஜிதா செப் ஆப் தி வீக் பெற்றார் அதோடு இரண்டாவது வாரத்தில் அக்ஷய் கமல் மற்றும் வசந்த் வசீ ஆகிய இருவரும் செப் தி வீக் வாங்கினார்கள். இதழ் நிலையில் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள இந்த குக் வித் கோமாளி சோவின் முதல் எலிமினேஷன் ரவுண்டும் கடந்த வாரத்தில் நடந்துள்ளது அதில் முதல் எலிமினேஷன் ரவுண்டிலேயே டிடிஎஃப் வாசனையின் காதலியாக அறியப்படுகின்ற ஷாலின் சோயா எலிமினேட் ஆகியுள்ளார். அதாவது இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா மற்றும் ஷாலின் ஆக இருவரும் டேஞ்சர் சோனில் இருந்தனர் இருப்பினும் இறுதியாக ஷாலின் சோயா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், நான் பல வருடங்களாக திரைப்படத்தில் நடித்து வருகிறேன் ஆனால் அப்பொழுதெல்லாம் எனக்கு கிடைக்காத புகழ் பெயர் அனைத்தும் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். முன்னதாக ஷாலின் சோயாவை கன்னத்தில் கிள்ளியதற்கு அவரது காதலரான வீடியோ வாசன் சில கருத்துக்களை முன்வைத்து விமர்சனங்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு அடுத்தடுத்த வாரத்தை இனி யார் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் யாருடைய சமையல் நிலைத்திருக்க போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.