சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமாகிய கார்த்தி சிதம்பரம் நடிகை மாளவிகா மோகனுக்கு வெப் தொடர் ஒன்றை பரிந்துரை செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது என்பதும் இதனை தொடர்ந்து அவருடைய ஆடிட்டர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ’ஏதாவது புதிய படம் அல்லது வெப் தொடர் பார்க்கலாம் என்றால் எதை பரிந்துரை செய்வீர்கள்? என தனது ஃபாலோயர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பலரும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை பரிந்துரை செய்தனர்.இந்த நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் ’இன்வெண்டிங் அன்னா’ என்ற வெப்தொடரை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை செய்துள்ளார். கார்த்திக் சிதம்பரத்தின் இந்த பதிவு பெரும் வைரலாக பரவ பலரும் பல விதமான கமெண்டுகளை குவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு மாளவிகா மோகன் எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
ஒரு எம்.பி க்கு எத்தனை மக்கள் பணி இருக்கிறது ஆனால் நடிகையின் பொழுது போக்கு கேள்விக்கு பதில் கொடுத்து கொண்டு இருக்கிறாரே, இவரை தான் சிவகங்கை மக்கள் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்து இருக்கிறார்கள் என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர், இது ஒருபுறம் என்றால் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான H. ராஜா அவரது முகநூல் பக்கத்தில் ஒருவர் சிவகங்கை தொகுதி தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு விரைவில் கார்த்தி கைது செய்தியை எதிர்பார்க்குறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதாவது சிபிஐ வழக்கில் விரைவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்பதை H. ராஜா அவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, H. ராஜா குறிப்பிட்டதும் கார்த்தி சிதம்பரம் நடிகைக்கு படம் பரிந்துரை செய்த என இரண்டு சரி சர்ச்சைகள் கார்த்தி சிதம்பரத்தை இப்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன.