தேசிய சிந்தனை கொண்ட இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை வழங்கி கவுரவித்துள்ளது பாஜக என்று பலர் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் திராவிடத்தை கிண்டல் செய்யும் நிலைமையும் உருவாகி இருக்கிறது.
நாடு முழுவதும் பாஜக நினைத்து இருந்தால் தொழில் அதிபர்களுக்கு நியமன மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி இருக்கலாம் ஏன் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மல்லையாவிற்கு கூட பதவி வழங்கப்பட்டது அப்படி இருக்கையில் இளையராஜாவிற்கு பொறுப்பு வழங்கி கவுரவித்துள்ளது பாஜக என்று பலரும் பாராட்டு தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் இளையராஜாவிற்கு தேசியம் எம்.பி பதவி வழங்கிய நிலையில், தமிழ் மொழி திராவிடம் என பேசிவரும் இசையமைப்பாளர் ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா இன்னும் பலருக்கு என்ன கிடைக்கும் என நெட்டிசன் ஒருவர் விளையாட்டாக கேள்வி எழுப்பினார், அதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் பாச தளபதிக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வெண்கல கிண்ணம் ஒன்றை கொடுத்து அனுப்புவார்கள் அவ்வளவுதான் பதவி எல்லாம் கிடைக்காது என்று நக்கலாக குறிப்பிட்டு இருக்கிறார்.
" இந்த பதிவு " இணையத்தில் வைரலாகி வருகிறது ,End. ilayaraja குறித்த மேலும் வைரலாகும் பதிவை கீழே கொடுத்துள்ளோம், இளையராஜா தன் கடவுள் நம்பிக்கையை வெளியே காட்டாமல் இருந்திருந்தால், திமுக சார்பு ஜால்ரா அடித்து கொண்டிருந்தால், இந்திய எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருந்தால், இந்நேரம் ராஜாவை அவரது இசை பின்னனி தாண்டி ஒரு ஆளுமையாக புகழ்ந்து தள்ளி இருப்பார்கள். கூடவே பா. ரஞ்சித் பாணியில் கொஞ்சம் தலித் அரசியலை வெளிக்காட்டி இருந்தால் அவரது இசையை புரட்சி வெளிப்பாடாக சித்தரித்து இருப்பார்கள்.
மாறாக இளையராஜா சாதிய மனநிலையை கடந்து நிற்கிறார், இங்கிருக்கும் தலித்தரசியல்வாதிகள் செய்யும் தலித் மக்களை இந்து மதத்திற்கு எதிராக வைக்கும் போக்கிற்கு மாற்றாக தன்னை இந்து ஆன்மீகத்துடன் பொருத்தி முன்வைக்கிறார், இதன் வழியாக தலித் மக்களை இந்து அடையாளத்தில் இருந்து விலக்கும் அரசியலுக்கு எதிராக நிற்கிறார்.
இந்துத்துவ அரசியல் இந்துக்களில் இருக்கும் சாதிய உயர்வு தாழ்வு நோக்கிலான அனுமுறைகளை நீக்க தொடர்ந்து போராடி வருகிறது, தனக்கு வாய்ப்பு ( அதிகாரம் ) கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதுவரை சாதிய ரீதியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த மக்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறது. உண்மையில் தகுதிகள் இருந்தும் சாதிய காரணங்களுக்காக அங்கீகாரங்கள் மறுக்க பட்டவர்களுக்கு பிஜேபி / இந்துத்துவம் தேடிதேடி அளிக்கிறது.
தலித்தரசியல் என்பதற்கு ஏன் பொது வரவேற்பு இருக்கிறது என்றால் அது இந்து எதிர்ப்பு அரசியல் கொண்டிருக்கிறது என்பதால்தான், இது பிற மதங்களுக்கு அறுவடைகளை உருவாக்கி தரும், எனவே அவர்கள் இதற்கு ஆதரவும் நிதியும் கொட்டுகிறார்கள். இவர்களுக்கு ராஜா ஒரு இடைஞ்சலான அடையாளம், அதாவது தலித் அரசியலாளர்களுக்கு அல்ல, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு, இதை இப்போது கொஞ்சம் இணையத்தில் தேடி பார்த்தால் தெரியும், இளையராஜா mp ஆனதை தலித்திய அரசியலாளர்கள் வரவேற்ப்பதையும், இந்த தலித்தரசியலை ஆதரிப்பவர்களாக தங்களை காட்டி கொள்பவர்கள் கடுமையாக எதிர்ப்பதையும்!
இங்கிருக்கும் திராவிட அரசியல் என்பது பிராமணர் அல்லாத பிற உயர் சாதிகளின் அரசியல், இந்த அரசியலில் பட்டியல் சாதிகளுக்கு இடமில்லை, ஆனால் இருப்பதாக, செய்ததாக பாவலா காட்டுவார்கள், ( கொஞ்சம் செய்திருக்கிறார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன்!) இவர்களுக்குள் இருக்கும் சாதிய குணம் இன்னும் போகாமல் இருப்பதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமெனில் பட்டியல் சாதி மக்களுக்கு இன்னும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது, ஒட்டரசியலுக்காக, தங்களுக்கு தொண்டர்கள் என பணியாற்றுவதற்காக!
இப்போது பிஜேபி பட்டியல் சமூக மக்களை நோக்கி நகருவதால் இவர்கள் பதட்ட படுவது இதனால்தான் , எந்த பெரிய வாய்ப்பும் அளிக்காமல் வெறும் ஓட்டுக்காகவும், சேவகம் செய்வதற்காகவும் இதுவரை பட்டியல் சமூக மக்களை பயன்படுத்தி கொண்டிருக்கும் சூழலில் பிஜேபி உள்ளே புகுந்து பட்டியல் சாதி மக்களுக்கு அதிகாரம் வழங்குகிறது, பதவி வழங்குகிறது, வாய்ப்புகள் வழங்குகிறது, அங்கீகாரம் வழங்குகிறது.
இப்படியே போனால் பட்டியல் சாதி மக்களை தாங்கள் பயன்படுத்த முடியாமல் ஆகும், இந்த காரணம்தான் இவர்களை பிஜேபி நோக்கி போகும் பட்டியல் சாதி நபர்கள் மீது வெறிகொண்டு எதிர்க்க வைக்கிறது என்று ராதா கிருஷ்ணன் என்பவர் குறிப்பிட்டு இருக்கிறார்.