கடந்த திங்கள் அன்று சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஷாசில் இஸ்லாம் அன்சாரி என்பவர் முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் பேசிய அன்சாரி, “யோகி ஆதித்யநாத் வாயிலிருந்து குரல் வந்தால், எங்களின் துப்பாக்கிகள் புகையை வெளியிடாது தோட்டாக்களை வெளியிடும்” என்று மிரட்டல் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து அன்சாரி மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் நோக்கில் மிரட்டல் விடுத்தது, மோதலை உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் டெல்லி-ராம்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்சாரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி மாவட்ட அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந்நிலையில் யோகிக்கு மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ அன்சாரி “எனது வீடியோவை எடிட் செய்து அதை வைரலாக்கினார்கள். அந்த நிகழ்ச்சியில், பலமான எதிர்கட்சியாக இருப்பதால் புகை அல்ல தோட்டாக்களை வெளியிடும் துப்பாக்கி போன்ற அனைத்து விஷயங்களுக்கும் வலுவான பதிலடி கொடுப்போம் என்றுதான் நான் கூறியிருந்தேன்," யாரோ எடிட் செய்து எனக்கு எதிராக பரப்பி விட்டார்கள் என அப்படியே பல்டி அடித்தார்.
மொத்தத்தில் வாயால் மிரட்டல் விடுத்த எம்எல் ஏ பெட்ரோல் பங்கை இழந்ததுதான் மிச்சம் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது...