Tamilnadu

விசாரணையை தடுப்பதற்கு ஒரு மனு..! ஊரு பேரு "மைக்கேல்பட்டி"...புரிந்ததா மக்களே!

Lavanya suicide
Lavanya suicide

அரியலூர் மாணவி கட்டாய மத மாற்றம் காரணமாக பலியானதை தொடர்ந்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தைவா, கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்குவர். இப்படி ஒரு நிலையில் மைக்கேல் பட்டியை சார்ந்த ஊர் மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு மனு ஒன்றைக் கொடுத்து இருக்கின்றனர். அதில்,


"எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் அடங்குவர். எங்கள் ஊர் பழமையான ஊர். இந்த நாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துடன் ஒரே குடும்பமாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தநாள் வரைக்கும் மத சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் நடந்தது இல்லை. எங்கள் ஊரில் நடைபெறுகின்ற மத சம்பந்தமான திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்போம். எங்கள் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கிறது. இதில் மொத்த மாணவர்களில் சுமார் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தினர் பயின்று வருகின்றனர். அதேபோல் விடுதியிலிருந்து மாணவியரே அதிகம் படிக்கின்றனர். இந்த பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை. இந்த சூழ்நிலையில் சில மதவாத சக்திகள் மாணவி லாவண்யாவின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும் அமைப்புகளும் எங்கள் ஊரில் சகோதரத்துவம் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்தோடு வாழ்வதை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள் .நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். மற்றும் பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும் விசாரிப்பதையும்  தடுத்து  நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊர் பொதுமக்கள் என குறிப்பிட்டு இருந்தாலும், அந்த ஊர் பொதுமக்கள் அதிகம் யாராக இருப்பார்கள் என்பதை புரிந்துக்கொள்ள ஊர் பேரான  மைக்கேல்பட்டி என்பது மட்டும் போதுமானது. அடுத்ததாக, ஒரு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதில், விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்பதே.. அதாவது பாஜக அமைத்த 4 பேர் கொண்ட பெண்கள் குழு  விசாரணை நடத்தக் கூடாதாம் மக்களே. இப்படி கூடவா மனு கொடுப்பாங்க என் நெட்டிசன்கள் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.