Tamilnadu

சிக்கியது அடுத்த ஆதாரம் - அதிரடி திருப்பம்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! ஓமலூர் சுகன்யா ஞாபகம் இருக்கா?

annamalai and cbi
annamalai and cbi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் மிக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் இதோ..


ஓமலூர் சுகன்யா ஞாபகம் இருக்கா? நாம தான் எல்லா விஷயத்தையும் ரெண்டு நாள் கழிச்சி மறந்துடுவோமே.. பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற 17 வயது மாணவி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்தார். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி திடீரென சுகன்யாவை காணவில்லை. இந்த நிலையில் 18ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சுகன்யா பிணமாக கிடந்தார். இது எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

வழக்கை விசாரித்த காவல்துறை டிஎஸ்பி 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தற்கொலைதான் என்றார். இந்த மாணவி குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தார். இதே விஷயத்தை தான் அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில டிஜிபி இன் உத்தரவின் பெயரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் செய்த விசாரணையின் விளைவாக பிரேத பரிசோதனை அறிக்கையில் சுகன்யாவின் கருப்பையில் விந்தணு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் அதன்பின்னர் எந்தவித தகவலும் இல்லை. 2006 இல் இருந்து 2010 வரை அன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த திமுக இந்த சம்பவத்தில் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். சுகன்யாவின் ஊர்மக்கள் ஒன்றுகூடி போராடவே இந்த வழக்கை தூசிதட்டி எடுத்தார்கள். மீண்டும் வழக்கை விசாரிக்கத் தொடங்கிய சிபிசிஐடி சுகன்யா கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டார் என்பதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்கிற ஒரு பட்டியலை தயாரித்தது சிபிசிஐடி. அதில் 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இவர்களில் சிலர் பாதிரியார்கள் என்றும் அதிலும் 6 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும் தெரிய வந்ததால் தமிழகமே குலுங்கியது. அன்றைய தேதியில் சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய வழக்காக எல்லோராலும் பார்க்கப்பட்ட்டது.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு நிலைமை விபரீதத்தை தொட்டது. ஆனால் இன்று வரை இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. யார் மீதும் நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எந்த ஒரு கைது நடவடிக்கையும் இல்லை. சுகன்யா மற்றும் லாவண்யா இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் இருவரும் the congregation fransciscan sisters  of the  immaculate heart of mary நடத்தும் பள்ளியில் தான் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

பெண் பிள்ளைகளுக்கு இந்த பள்ளியில் பாதுகாப்பு இல்லை. அரசு மற்றும் நீதிமன்றம் இந்த சபை மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எங்கள் போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை. இது நியாயத்திற்கான போராட்டம் மட்டுமே. அனைவரும் எங்களுக்கு துணை நில்லுங்கள். மாவட்ட காவல் துறை, மாணவி லாவண்யாவின் வழக்கை எப்படி விசாரித்து வருகிறதோ...அதே அலட்சியத்தை சுகன்யா வழக்கிலும் காட்டியுள்ளது. அதனால்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம். மாணவி லாவண்யா மட்டுமல்ல இதன் மூலம் மாணவி சுகன்யாவுக்கும் நீதி கிடைக்கும்.

இவ்வாறு அந்த வீடியோ மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. ஏற்கனவே லாவணையா விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில் மீண்டும்  ஏற்கனவே ஒரு மாணவிக்கு பெரும் குற்றம் நிகழ்ந்து இருப்பதையும், அதற்கான தீர்வு  இதுவரை எட்டப்படாததால் இன்னும், பல அதிரடி திருப்பங்கள் வரலாம் என்றே எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.