Politics

டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தலின் வரலாற்றை மாற்றிய ஏ.பி.வி.பி .. இடதுசாரிகளை அதிரவைத்த பா.ஜ.க! மொத்தமாக மாறிய களம்..

jnu colloge
jnu colloge

டெல்லியின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிகளை  பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவியின் வைபவ் மீனா, இணைச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளார்.கல்வித் துறையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற வலது மற்றும் இடதுசாரி அரசியல் தலைவர்கள் பலரையும் உருவாக்கிய கல்வி நிலையம்தான் இந்த ஜே.ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தல் எப்போதும் மிக முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தேர்தலில் இடதுசாரி ஆதரவு மாணவர்கள் ஒரு அணியாகவும் வலதுசாரி பாஜக ஆதரவு மாணவர்கள் ஒரு அணியாகவும் மோதுவது வழக்கம். இந்த தேர்தல்களில் பொதுவாக இடதுசாரி மாணவர்கள்தான் வென்று வந்தனர். அதேநேரத்தில் வலதுசாரியான பாஜகவின் ஏபிவிபி, இடதுசாரி மாணவர்களுக்கு கடும் போட்டியை ஒவ்வொரு தேர்தலிலும் தந்து கொண்டிருக்கிறது.


இந்த ஆண்டு ஜேஎன்யூ மாணவர் சங்கத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டமைப்பினர் தலைவர் பதவி உள்ளிட்ட 3 முக்கிய பதவிகளைக் கைப்பற்றினர். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக இடதுசாரி கூட்டமைப்பின் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவியின் வைபவ் மீனா, இணை செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இடதுசாரி கூட்டமைப்பின் மணீஷா, பொதுச்செயலாளராக முன்தேகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஜேஎன்யூ தேர்தலில் ஏபிவிபி வெற்றியை ருசித்திருக்கிறது. இது இடதுசாரி மாணவர் கூட்டமைப்பினருக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

ஜேஎன்யூ தேர்தல் வெற்றியை இடதுசாரி மாணவர்களும் வலதுசாரி பாஜகவின் ஏபிவிபி மாணவர்களும் கொண்டாடும் வகையில் போட்டி போட்டு பேரணிகளை நடத்தினர்.ஜேஎன்யூவின் வரலாறு நெடுக மிகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவசரநிலை காலத்தில் ஜேஎன்யூ மாணவர்கள் உக்கிரமான போராட்டங்களை நடத்தி அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். பாஜக அரசு எப்போது நல்லதிட்டங்கள் எல்லாம் கொண்டு வருகிறதோ அப்போது எல்லாம் தூண்டுதலின் பேரில் ஜேஎன்யூவில் கிளர்ச்சி வெடிக்கும். மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து தீவிரப் போராட்டத்தை 2020-ல் ஜேஎன்யூ மாணவர்கள் முன்னெடுத்தனர். அப்போது பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர், இடது சாரி அமைப்பினரை எதிர்த்து போராடினார்கள். அப்போது இடது சாரி ஜேஎன்யூ மாணவர்கள் ஏபிவிபி  மாணவர்கள் கொடூரத் தாக்குதல்களை நடத்தியது.இந்த போராட்டத்தில் பல மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. 

3 வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இதில் தமிழ் பிரதிநிதிகளாக  இடம் பெற்றுள்ளனர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்ஷங்கர். இவர்கள் இருவருமே இந்த பல்கலைக்கழகத்தத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் எடுத்த வலதுசாரி சிந்தனைகள் தான் தற்போது இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. உலக விவாதமாக இருந்தாலும் சரி, அரசியல் தர்க்கங்களை ஒரு கை பார்க்கும் விவாதங்களாக இருந்தாலும் சரி அங்கு மிகச்சிறந்த பேச்சாளராக அமர்ந்திருப்பார் ஜெய் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளே இந்த இரு அமைச்சர்களின் பேச்சுக்குகளுக்கு பதிலடி தர இயலாமல் உள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.