சமீபத்தில் தாழம்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கெளதம் தற்கொலை செய்துகொண்டுதன் பின்னணியில் முன்னாள் அதிமுக பெண் அமைச்சர் பெயர் அடிப்பட தொடங்கி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம்.
இவர் 1993 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி லலிதா.லலிதாவின் தந்தை திமுக வில் சில ஆண்டு காலம் இருந்து பின்னர் மதிமுகவில் இணைத்துக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கும், வைகோவிற்கும் மிகவும் நெருக்கமான நபர் ஏழுமலை என்றே சொல்லலாம்.
இப்படியான தருணத்தில், கௌதம் காவல்துறையில் பணியாட்டி வந்ததால் அதிக காலம் விஐபி களுக்கு pso ஆக தான் இருந்துள்ளார். அந்த வகையில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், தூத்துக்குடி சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர் 2016-2021இல் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கும் pso கெளதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமாருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று பணி முடிந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்த கௌதம், நேற்று காலை திடீரென தன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.சம்பவம் அறிந்து நேரடியாக ஸ்பாட்டுக்கு சென்ற எஸ் பி. விஜயகுமார் லலிதாவிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
அதன்படி, " என் கணவர் கௌதம் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது பலருக்கும் வேலை வாங்கி தருவதாக கணவரிடம் தெரிவித்தார். அதன்படி இவரும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடத்திலும் பணத்தை பெற்று நிலோபர் கபிலிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் அவர் வேலையும் வாங்கி தரவில்லை. தற்போது அதிமுக ஆட்சியும் இல்லை. இப்படி ஒரு நிலையில் அனைவரும் பணத்தை திருப்பி கேட்கத் தொடங்கினர். என் கணவர் கௌதம் நிலோஃபரிடம் பலமுறை போன் பேசியும் நேரில் சந்தித்தும்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
ஆனால் அதற்கு என்ன பதில் தெரிவித்தார் தெரியவில்லை. கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இப்படி எங்களை விட்டுப் போய் விட்டார் என கதறி அழுதுள்ளார்.மேலும் கௌதம் உடன் பணிபுரிந்த பலரும் கௌதம் பலமுறை நிலோபர் கபிலை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர் போன் எடுப்பதை தவிர்த்து வந்தார். நேரில் சென்று கேட்டாலும் சரியான பதில் கிடையாது. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த தகவலின் அடிப்படையில், கௌதம் செல்போனுக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள், டைரி, நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனடிப்படையில் மிக விரைவாக நிலோஃபரை விசாரணை செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.