ருத்ரதாண்டவம் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி,தன்னுடைய அடுத்த படத்தில் நடிகர் சிம்பு வைத்து படம் இயக்க உள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கு முன்னதாக திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மோகன்ஜி அடுத்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடக்கும் அரசியலை வைத்து படம் எடுக்கப் போவதாக ருத்ரதாண்டவம் படவிழாவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தன்னுடன் 10 கதைகளை கைவசம் வைத்திருப்பதாகவும் அதில் குறிப்பாக பாலிவுட் நடிகர் ஒருவரை மனதில் வைத்து தான் மிக முக்கிய கதையை தயாரித்து வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்காக அந்த பாலிவுட் நடிகரை தொடர்பு கொண்டு பேசியும் வருகிறாராம். இவரின் கதையை கேட்டு, அந்த குறிப்பிட்ட பாலிவுட் நடிகர் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரை வைத்து படம் எடுப்பதாகவும், இல்லை என்றால் தமிழில் நடிகர் சிம்புவை வைத்து அந்த குறிப்பிட்ட கதையை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அந்த குறிப்பிட்ட கதை சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை அடிப்படையாக கொண்ட கதையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் நடிகர் ராதாரவிக்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கதையை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்த இயக்குனர் மோகன் நடிகர் சிம்புவுக்காக எந்த கதையை வைத்து இருக்கிறார் என்பது தெரியவில்லை.
அதேவேளையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கதையில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க வாய்ப்பும் இருக்கின்றது என கூறப்படுகிறது. மோகன்ஜி எடுத்த திரௌபதி படத்தில் ஜாதி பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது. அதனை தொடர் தற்போது வெளியாகி உள்ள ருத்ர தாண்டவம் படத்தில் மதம் மாறுதல் குறித்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தொகுதியில் அரசியல் குறித்து படம் எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஆக மொத்தத்தில் இயக்குனர் மோகன் இயக்கும் ஒவ்வொரு படமும் பேசும் பொருளாக மாறி வருகின்றது.அதே வேளையில் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று இருக்கிறது.
அதற்கெல்லாம் காரணம் உண்மையில் நடைபெறும் கதைகளை வைத்து இவர் படம் எடுப்பதால் மக்கள் இவருக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் அடுத்து இயக்குனர் மோகன் ஜி எந்த படத்தை எடுக்கப் போகிறார் என்பது குறித்து இப்போதே மிகவும் ஆவலாக பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தொடர்ந்து பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.