17 வயது சிறுமியை அவருடைய தந்தையே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் அதுமட்டுமல்லாமல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் என மொத்தம் 28 பேர் பல வருடங்களாக கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது குறித்து அப்பெண் தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை அடிக்கடி பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தாக்குதல் நடைபெற்று வருவதை காணமுடிகிறது. இதற்கு எதிராக எதிர்க் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அதேவேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தாக்குதல்களும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எப்போதும் உத்தரபிரதேசத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல். பெண் குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர்.
இப்படி ஒரு சமயத்தில் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது பெண் போலீசில் கொடுத்த புகாரில், "என்னுடைய அப்பா ஒரு லாரி டிரைவர். நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னிடம் ஆபாச படங்களை தன் மொபைலில் போட்டு பார்க்கும்படி மிரட்டல் கொடுத்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார். பின்னர் ஒருநாள் என்னை வெளியில் அழைத்துச் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த ஒரு வயல் வெளிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து, இதுபற்றி வெளியில் சொன்னால் என் அம்மாவைக் கொன்று விடுவதாக மிரட்டினார்.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
அதன் பிறகு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து அடிக்கடி கொடுப்பார். நான் மயக்கத்தில் இருக்கும்போது என்னை வேறு பலரும் வந்து கூட்டு பலாத்காரம் செய்தார்கள். நான் வயிற்று வலியில் மிகவும் துன்புற்றேன். அதில் குறிப்பாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ் ,அந்த கட்சியின் நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியால், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆகீர்வார் உள்ளிட்ட 27 பேர் என்னை இவ்வாறு பல வருடங்களாக துன்புறுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கை கேட்டறிந்த லலித்பூர் sp அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது இது முக்கியமாக வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டுள்ளது. அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த யாதவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து யாதவ் தெரிவிக்கும்போது, இது எனக்கு எதிரான பொய். யாரோ சதி திட்டம் தீட்டுகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்புபடுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன். இதற்கு நியாயமான விசாரணை வேண்டும் என நீதிபதியிடம் மனு கொடுக்க போகிறேன் என குறிப்பிட்டு இருக்கின்றார். இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை உட்பட 28 பேர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.