இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அதிமுக மற்றும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் இடையே வெகு விமர்சையாக நிவாரண உதவி என பல உதவிகளுடன் அனுசரிக்க படுகிறது. ஜெயலலிதா என்று சொல்வதை காட்டிலும் தமிழகத்தில் பலர் அம்மா என்றே ஜெயலலிதாவை அழைப்பர்.
இந்த சூழலில் சரியாக ஜெயலலிதா நினைவு நாள் அன்று அஜித் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படத்தின் அம்மா பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து உள்ளது, போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹூமா குரோஷி நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஆக அம்மா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த பாடல் லிரிக் விடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையை கடந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற சூழலில் ஏன் இன்றைய நாளில் சரியாக தேர்வு செய்து அம்மா பாடலை வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது, சில நாட்களுக்கு முன்னர் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை சந்தித்து பேசினார், அப்போது வலிமை படத்தின் சாட்டலைட் ரைட்ஸ் கலைஞர் டிவிக்கு கேட்டதாகவும், மேலும் திரையரங்கு விநியோக உரிமையை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு படக்குழு எந்த வித சம்மதமும் சொல்லாத சூழலில் வேறு ஏதேனும் வகையில் எதிர்ப்புகள் மாநாடு படத்திற்கு தீபாவளி வெளியீட்டிற்கு வந்தது போன்று வலிமை படத்திற்கும் வரலாம் என்று கருதுவதால் தங்களுக்கும் அரசியல் தெரியும் என சரியாக ஜெயலலிதா நினைவு நாள் அன்று அம்மா பாடல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழு உறுதி படுத்தினால் மட்டுமே பேசப்படும் தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.